மகரம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்

july-2025-magaram-rasi-palangal
மகரம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்

சுக்கிரன்  5,ம் இடத்தில் பலத்துடன் காணப்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் தன வரவுகள் உண்டாகும் உறவினர்களுக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.புதிய வாகன யோகமும் உண்டு.

3-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் பெறுவீர்கள் வழக்குகள் வாபஸ் ஆகும்.

வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
மாதம் முற்பாதி வரை சூரியன் ஆறாம் இடத்தில் பலமாக சஞ்சரிப்பதால் அரசியல் செல்வாக்கு உண்டாகும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.

இம்மாதம் புதன் 7-ம் வீட்டில் பலவீனமாக காணப்படுவதால் சோம்பலாக காணப்படுவீர்கள் எடுத்த காரியம் யாவும் காலதாமதம் ஏற்படும்.

ஆறாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் மேலதிகாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

இரண்டில் ராகுவும் எட்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிப்பதால் மன அமைதி கெடும் மனம் குழப்பத்துடன் காணப்படும் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள் உணவு விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்தவும் உடல்நல பிரச்சினைகள் வரக்கூடும்.

இம்மாதம் செவ்வாயும் 8 மற்றும் 9-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் முன் கோபத்தை தவிர்க்கவும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவசர முடிவுகள் எடுத்து விடாதீர்கள் நின்று நிதானமாக யோசித்து எதையும் முடிவு செய்யுங்கள்.

ஜூலை.27,28,29 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் வாயுபுத்திரன் ஹனுமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்து வாருங்கள் இயலாதவர்களுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.