விருச்சிகம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்
செவ்வாய் பலம் பெற்று 10-11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
கேது ராசிக்கு 10ம் வீட்டில் இருப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் லாபத்தை தரும்.
இம்மாதம் சுக்கிரன் 6-7ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் கணவன் மனைவிக்குள் வீண் விவதங்கள் நடக்கும் மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் கலகம் உண்டாகும்.
4-ம் இடத்தில் ராகு இருப்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் உணவு விஷயங்களில் எச்சரிக்கை தேவை.தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
5-ம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.
சூரியன் 8 மற்றும் 9ம் இடங்களில் பலவீன படுகிறார் இதனால் அரசாங்க பகைகள் வரக்கூடும்
பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.சொத்துக்கள் வாஙகும் பொழுது பத்திர பதிவுகளில் கவனம் செலுத்தவும்.
இம்மாதம் புதனும் 9-ம் இடத்தில் பலவீனம் சோம்பல் அதிகரிக்கும் கொடுத்த வேலையை சரியாக முடிக்க முடியாமல் அவஸ்த்தை படுவீர்கள்.வேலை பளூ அதிகரிக்கும்.
அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் குரு இருப்பதால் ஆடம்பர செலவுகளை தவிற்க்கவும் தேலையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.
ஜூலை 22,23,24 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் மலை மீது குடிகொண்டிருக்கும் முருக பெருமானுக்கு வழிபாடும் அர்ச்சனையும் செய்து செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.