துலாம் ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்
வருட கோள்கள் குரு, கேது, சனி, ஆகிய மூன்று கோள்களும் உங்கள் ராசிக்கு நற்பலன்களை வழங்கி வருகிறது அவ்வகையில் குரு பகவான் ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து குடும்பத்தில் திருமண சுப காரியங்களை நடத்தி வைப்பார் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் வழக்குகள் வாபஸ் ஆகும்.
11-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
இம்மாதம் புதன் பத்தாம் இடத்தில் பலம் பெற்று இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் தன வரவுகள் உண்டாகும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்ததை வாங்க முடியும் பங்குச்சந்தை டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்கள் லாபத்தை தரும்
மாத கோள்களில் செவ்வாய் இம்மாதம் 28ஆம் தேதி வரை ராசிக்கு 11-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் போட்டி தேர்வுகள் வெற்றி பெறுவீர்கள் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும்.
மாத பிற்பாடு சூரியன் ராசிக்கு பத்தாம் இடத்துக்கு வருகிறார் இதனால் அரசியல் செல்வாக்கு கூடும் பிரகாசமாக காணப்படுவீர்கள் வீடு மனை சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
சுக்கிரன் 8 மற்றும் 9 ஆம் இடங்களில் பலமாக காணப்படுகிறார் உறவினர்களால் நற்செய்தி கிடைக்கும் புதிய வாகன யோகம் உண்டாகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.
ராசிக்கு 5-ம் இடமான புத்திர ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் பிள்ளைகளுடன் கனியாக நடந்து கொள்ளுங்கள் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் யாரிடமும் வம்பு வைத்து கொள்ள வேண்டாம்.
ஜூலை 20,21,22 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடும் அர்ச்சனையும் செய்து வாருங்கள்.
குலதெய்வ வழிபாடும் சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.