அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா! இடைத்தேர்தலுக்கு ரெடியாகும்...
மேஷம் : ஜூலை மாதம் 2025 ராசி பலன்கள்
சுக்கிரன் பலம் பெற்று 2மற்றும் 3ம் இடங்களில் வலம் வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர்கள் மூலமாக நற்ச்செய்தி கிடைக்கும்.
இம்மாதம் முழுவதும் புதன் 4ம் வீட்டில் பலத்துடன் சஞ்சரிப்பதால் ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் அறிவு திறமையால் தடையட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்.கூட்டு தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
மாத முற்பாதிவரை சூரியன் 3-ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் அரசியல் செல்வாக்கு பெருகும் பெயர் புகழ் உண்டாகும்.
வருட கோள்களில் ராகு பலம் பெற்று 11ம் இடத்தில் இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் .
மருத்துவ செலவுகள் குறையும்.
5-ம் வீட்டில் கேது இருப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அடிக்கடி ஆன்மீக பயணங்கள் மேற்க்கொள்வீர்கள்.
உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும்.
ஏழரைச்சனியில் தற்சமயம் 12ம் இடமான விரையச்சனி நடப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம் யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் இடாதீர்கள்.
மூன்றாம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் தண்ட செலவுகள் வரைவழைக்கும் ஆடம்ப செலவுகளை தவிற்பது நன்று. தொழில்களுக்காக புதிய முதலீடுகள் தவிற்ப்பது நன்று.
செவ்வாய் 28ம் தேதி வரை 5-ம் இடத்தில் பலவீனமாக சஞ்சரிப்பார் இதனால் முன்கோபம் அதிக அளவில் காணப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்.
ஜூலை 7,8,9 தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்து வரவும். அமாவாசை திதியன்று குலதெய்வ வழிபாடு சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.