என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே.. கமல்ஹாசன் அறிக்கை.
இன்றைய ராசிபலன் - (14-06-2025 சனிக் கிழமை)
மேஷம்
இனனறு எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.
காலை 11:35 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
மிதுனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.
காலை 11:35 முதல் சந்திராஷ்டமம்
தொடங்குகிறது.
கடகம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
துலாம்
துலாம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உற்சாகமான நாள்.
விருச்சிகம்
ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.