ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - கும்பம்

june-2025-kumbam-rasi-palangal
ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - கும்பம்

இந்த ஜூன் மாதம் ராசிக்கு 3-மற்றும் 4ம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷம் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

5-ம் இடத்தில் குருபகவான் இருப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும்.

ஜூன் 5-ம் தேதி முதல் 22ம் தேதிவரை புதன் 6ம் வீட்டில் சஞ்சரிப்பார் இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
புத்தி கூர்மையால் எதையும் சாதிக்க முடியும்.

புதிய வேலை வாய்புகள் உருவாகும். செவ்வாய் 7ம் தேதிவரை 6-ம் இடத்தில் பலம் பெற்றாலும் பிறகு 7ம் இடத்தில் பலவீனபடுகிறார்
முன் கோபத்தை தவிற்க்கவும்.  அவசர முடிவுகள் வேண்டாம். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

இரண்டாம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் தேவையின்றி கடன்கள் வாங்காதீர்கள். யாரக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

சூரியன் 4- மற்றும் 5ம் இடங்களில் பலவீனமாக சஞ்சரிப்பதால் பெரிய மனிதர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம் எச்சரிக்கையாக இருக்கவும் அரசியல் செல்வாக்கு குறையும்.

பெயர் புகழுக்கு களங்கம் ஏற்ப்படும் கவனம். ராசிக்குள் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் இருப்பதால் உடல்நலனில் அக்கறை கொள்ளவும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.

உறவினர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் வைத்துக்கொள்ளாதீர்கள் . வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும் வேலையில் திருப்தி
இருக்காது.

ஜூன் 4,5,6, சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் சனிபகவான் வழிபாடும் ஹனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வரவும் நல்லதே நடக்கும்.