ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - மகரம்

june-2025-magaram-rasi-palangal
ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - மகரம்

சுக்கிரன் பலம் பெற்று 4-5ம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்ப நிம்மதி கிடைக்கும்.வ்  கணவன் மனைவி உறவு பலப்படும்.
சனிபகவான் 3ம் இடத்தில் இருப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் .. வழக்குகள் முடிவுக்கு வரும்.
புதன் 5ம் தேதிவரை 5ம் இடத்திலும் 22ம் தேதிவரை 6ம் இடத்திலும் 22ம் தேதிக்கு பிறகு 7ம் இடத்துக்கும் செல்கிறார் இதில் 6-ம் இடம் என்பது வெற்றியை தரும் இடமாகும் புத்திகூர்மையால் எதையும் சாதித்துக்காடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும். மாத பிற்பாதி சூரியன் 6-ம் இடத்துக்கு சென்று நன்மைகளை வழங்குவார் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.தந்தை மகன் உறவு பலப்படும்.

இம்மாதம் செவ்வாய் 7 மற்றும் 8-ம் இடங்களில் பலவீனப்படுவதால் அவர முடிவுகளால் பண இழப்புகள் உண்டாகும் யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம் சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நன்று.

6-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால்.
தொழில்களுக்காக புதிய முதலீடுகள் தவிற்க்கவும்.
வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும்.

ஆடம்பர செலவுகளை குறைக்கவும். இரண்டம் இடத்தில் ராகுவும் 8-ம் ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும் . அலைச்சல் அதிகமாக காணப்படும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

ஜூன் 2,3,4 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய
செவ்வாய்க்கிழமைகளில் வாரஹி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.