ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - விருச்சிகம்
இந்த ஜூன் மாதம் கோள்கள் எதுவும் பெரிய நன்மைகள் தரப்போவது இல்லை.வருட கோள்களில் கேது மட்டும் 10ம் இடத்தில் இருந்து தொழில் விருத்தி தருவார் புதிய தொழில் மூலமாக வருமானம் கிடைக்கும். வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும்.
சுக்கிரன் 7-ம் இடத்தில் அமர்ந்து குடும்பத்தில் கலகம் ஏற்படுத்தும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் உருவாகும்.
உறவினர்களிடம் எசசரிக்கையாக இருக்கவும் பண விவகாரங்களில் கவனம் தேவை.
இம்மாதம் சூரியன் 7-8ம் இடங்களில் சஞ்சரிப்பதால் அரசாங்க பகை வரக்கூடும்
தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
செவ்வாய் ஜூன் 7ம் தேதிக்கு பிறகு 10 ம் இடத்துக்கு வருவதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும்.
கூட்டு தொழில் லாபத்தை தரும். 5-ம் இடத்தில் சனிபகவான் இருப்பதால் சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் பங்காளிகளுக்குள் விட்டுக்கொடுத்து போவது நன்று.
4-ம் இடத்து கேது தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.தாயாருடன் வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள்.சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் பத்திர பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.
இம்மாதம் புதனும் நன்மைகளை வழங்க மாட்டார் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
கூட்டு தொழில் கவனம் தேவை.
அஷ்டம குரு ஆடம்பர செலவுகள் குறைப்பது நன்று வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும் அலைச்சல் அதிகமாக காணப்படும்.
ஜூன் 25,26,27 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு சிறப்பைத்தரும்
கால்நடைகளுக்கு உணவு வழங்கி வாருங்கள் நல்லதே நடக்கும்.