ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - துலாம்

june-2025-thulam-rasi-palangal
ஜூன் மாதம் 2025 ராசி பலன்கள் - துலாம்

இந்த ஜூன் மாதம் செவ்வாய் 10-11ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் தைரியம் துணிச்சல் பிறக்கும் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும் .விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். 6-ம் இடத்தில் சனிபகவான் புதிய தொழில் வாய்புகளை உருவாக்குவார் பணம் புகழ் அந்தஸ்து அதிகாரம் கிடைக்கும். வழக்குகள் வாபஸ் ஆகும் .

பழைய பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். 9-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்களுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

பொன் ஆபரண சேர்க்கை உண்டாகும். 11-ம் இடத்தில் கேது இருப்பதால் சோர்வுகள் நீங்கி புதுப்பொலிவுடன் செயல்படுவீர்கள்.வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

இம்மாதம் 8-மற்றும் 9-ம் இடங்களில் சூரியன் பலவீனமாக காணப்படுவதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம் பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அரசாங்க பகை வரக்கூடும் கவனம். இம்மாதம் புதனும் பலவீனமாக இருப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.

பண விவகாரங்களில் கவனம் தேவை.கூட்டு தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்கவும்.
5-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகளால் பிரச்சனைகள் உண்டாகும் வீண் விரையங்கள் வரக்கூடும்.அன்னியமொழி நபர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் யாருக்கும் ஜாமின் வழங்காதீர்கள்.

ஜூன் 29ம் தேதிவரை சுக்கிரன் 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை தலைதூக்கும் நீயா நானா போட்டி தொடங்கும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நன்று.  ஜூன் 23,24 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்தூ வரவும்
அமாவாசை அல்லது பௌர்ணமி திதியன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.