மே மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

may-2025-dhanusu-rasi-palangal
மே மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

தனுசு ராசி நண்பர்களே, இந்த மே மாதம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு+கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்

தனுசு ராசியை பொருத்தமட்டில் இந்த கிரக பெயர்ச்சியில் குரு மற்றும் ராகு அற்புதமான பலன்களை தரப்போகிறார்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குரு பகவான் 7-ம் இடத்திற்கு செல்கிறார் இதனால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி அமையும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் கடன் சுமைகள் குறையும் கொடுத்த பணம் வசூல் ஆகும் தந்தை மகன் உறவு பலப்படும் இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் புதிய வாகன யோகமும் உண்டு புதிய சொத்துகளும் வாங்க முடியும்.

ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்த ராகு பகவான் 3-ம் இடமான தைரிய ஸ்தானத்திற்கு பின்னோக்கி வருகிறார் இதனால் ராகு மிகுந்த நற்பலன்களை வாரி வழங்குவார் மருத்துவம் விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் வெளியூர் பயணங்களால் மன மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் தேடி வரும் உத்தியோகத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய நண்பர்களின் உதவிகளும் கிடைக்கும்.
ராசிக்கு பத்தில் அமர்ந்த கேதுபகவான் இந்த ராகு+ கேது பெயர்ச்சியில் 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் சற்று மன குழப்பங்கள் காணப்படும் பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் உண்டாகும் தந்தை மகனுக்குள் கருத்து மோதல்களும் உருவாகும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது ஆன்மீகப் பயணங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வாருங்கள் கால்நடைகளுக்கு உணவு வழங்கி வாருங்கள் குலதெய்வ வழிபாடும் மன நிம்மதியை தரும் நல்லதே நடக்கும்.