மே மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்
துலாம் ராசி நண்பர்களே, இந்த மே மாதம் நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
அஷ்டம ஸ்னமான 8-ம் இடத்தில் அமர்ந்த குருபகவான் மே மாதம் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குரு பெயர்சியில் 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்துக்கு வருகிறார் பொதுவாகவே குருபகவான்
2,5,7,9,11-ம் வீடுகளில் அமர்ந்தால் யோக நிலைகளை வாரி வழங்குவார் இதை ஜோதிட சாஸ்திரத்தில் குருபலன் வியாழநோக்கு என்று சொல்வார்கள் கடந்த ஒரு வருட காலமாக 8-ம் இடத்தில் அமர்ந்த குரு பல நஷ்டங்களை உண்டு பண்ணி இருப்பார் மன உளைச்சல் பணவிரயங்கள் தொழில் முடக்கம் என பல சோதனைகளை தந்திருப்பார் இந்த
குருபெயர்ச்சியில் ராசிக்கு 9-ம் இடமான பாகிய ஸ்தானம் என்பது நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய இடமாக கருதப்படுகிறது குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் தடைபட்ட திருமணங்கள் நடக்கும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாகன யோகங்கள் உண்டாகும் கடன் சுமைகள் குறையும் மனதில் அமைதியும் சந்தோஷம் பிறக்கும்.
மே 18-ம் தேதி நடைீபறக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் கேது பகவான் 12-ம் இடமான விரைய ஸ்தானத்திலிருந்து 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு செல்கிறார் இதனால் நற்பலன்களை காணலாம் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் நண்பர்கள் உதவி கிடைக்கும் சகோதர வழியில் ஆதரவும் தந்தை வழியில் சொத்துக்களும் வந்தடையும் பூர்விக சொத்து பிரச்சனைகள் தீரும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
6-ம் இடத்திலிருந்து ராகு பகவான் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு வருவதால் மன குழப்பங்கள் காணப்படும் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் விரயங்கள் உண்டாகும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாரையும் முழமையாக நம்பிவிடாதீர்கள்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடும் உபாசனைகளும் செய்து வாருங்கள் மகாலட்சுமி விரதம் இருந்து தினசரி காலை மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.