மே மாதம் 2025 - சிம்மம் ராசி பலன்கள்
சிம்மராசி நண்பர்களே மேமாதம் நடைபெறக்கூடிய குருபெயர்ச்சி மற்றும் ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
கடந்த ஒரு வருடமாக 10-ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் மேமாதம் 14-ம் தேதி நடைபெறக்கூடிய குருபெயச்சியில் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு வருகிறார் .
இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வேலையில் முன்னேற்றம் காணப்படும் மேலிடத்திலிருந்து பாராட்டுகள் பெறுவீர்கள்.
பதவி உயர்வு பெயர் புகழ் உண்டாகும்.அரசியல் செல்வாக்கு கூடும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடை என்று நினைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் பண சேமிப்புகள் உண்டாகும் கொடுத்த பணம் வசூல் ஆகும் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திடீரென கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும்.மகிழ்ச்சியும் ஆனந்தமும் உண்டாகும் சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.
அஷ்டம ஸ்தானத்திலிருந்து ராகுபகவான் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகளும் ஈகோ பிரச்சனைகளும் தலை தூக்கும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போடாதீர்கள் பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் காணப்படும் .நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.
2-ம் இடத்தில் இருந்த கேது ராசிக்குள் வருகிறார் இதனால் மனக்குழப்பமாக காணப்படும் யாரை நம்புவது என மனம் அலைபாயும் தேவையில்லாத டென்ஷன் மனச்சோர்வுகள் உண்டாகும் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளுவீர்கள் இதனால் உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும் நேரம் கிடைக்கும் பொழுது ஓய்வு எடுத்துக் கொள்வது மிக அவசியம் புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயம் சென்று அங்குள்ள நவகிரக சூரியனை வழிபாடு செய்யுங்கள் பிரதோஷ வழிபாடும்
சிறப்பைத்தை தரும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் நல்லதே நடக்கும்.