விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு 2025 - கன்னி ராசிபலன்கள்

tamil-new-year-2025-kanni-rasi-palangal
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு 2025 - கன்னி ராசிபலன்கள்

இந்த தமிழ் புத்தாண்டானது உங்கள் ராசிக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும் மனதில் சந்தோஷமும் தைரியமும் பிறக்கும் கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.

சனிபகவான் 6-ம் இடத்திலிருந்து 7-ம் இடத்துக்கு கண்டகச்சனியாக மாறுவதால் சனியால் நன்மைகள் வழங்க முடியாவிட்டாலும் மே மாதம் வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியில் ராகு பகவான் ராசிக்கு 6-ம் இடத்துக்கு பின்னோக்கி வந்து சனி வழங்கிய நற்பலன்களை பன் மடங்காக உங்கள் ராசிக்கு வழங்குவார் பண தேவைகள் பூர்த்தியாகும் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் புதிய சொத்துக்கள் வாங்க முடியும் வெளிநாடு செல்லும் யோகமும் வெளிநாடு வேலைவாய்ப்புகளும் உருவாகும் பங்குச்சந்தை டிரேடிங் மற்றும் ஆன்லைன் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும் திடீர் பணவரவுகளால் பணத் தேவைகள் பூர்த்தியாகும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

7-ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் வரக்கூடும் ஈகோ பிரச்சினையால் மன அமைதி கெடும் உறவினர் வகையில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடும் யாரிடமும் அளவுடன் நடந்து கொள்ளுங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்.

வரும் மே மாதம் வரை மட்டுமே குருபகவான் 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நன்மைகளை வாரி வழங்குவார் பிறகு 10-ம் இடத்துக்கு வருவதால் பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும் பெரிய தீமைகள் எதுவும் தர மாட்டார் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் செய்யும் தொழிலில் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் வீண் ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று.

ராசிக்குள் இருந்து வந்த கேது பகவான் 12-ம் இடமான விரைய ஸ்தானத்துக்கு பின்னோக்கி செல்கிறார் ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும் அடிக்கடி கோயில் வழிபாடு தலங்களுக்கு சென்று வருவீர்கள் அடிக்கடி உடல் நல குறைபாடுகள் வரக்கூடும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்!

வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் நவகிரக சனி பகவான் வழிபாடும் நேரம் கிடைத்தால் சனி பகவானின் நட்சத்திர நாட்களான பூசம் அனுஷம் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சனிபகவானின் திருத்தலங்களான திருநள்ளாறு குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வரலாம் நல்லதே நடக்கும்.