இன்றைய ராசி பலன்கள் - (12-03-2025 புதன் கிழமை)
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, மற்றவர்களை நம்பி எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் இருக்கும். வேண்டியவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பெருமைகளை சொல்லி மகிழ்வீர்கள். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .
கடகம்
கடக ராசி நேயர்களே, ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நடக்கும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளவும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிறருக்கு வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. வாகனத்தில் மெதுவாக செல்லவும்.தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. உறவினர்களிடம் அடிக்கடி வாதம் செய்ய வேண்டாம். கொடுக்கல், வாங்கல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்ப பாரம் சுமையாக இருக்கும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க முடியும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்
தனுசு
தனுசு ராசி நேயர்களே, வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிராத்தனைகள் நிறைவேறும். முக்கியமான காரியங்களை தனித்து நின்று செய்யவும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்ப பிரச்னைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தாரின் நன்மதிப்பை பெற முடியும். மற்றவர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நேயர்களே, பிரபலங்களின் தொடர்பு உற்சாகம் தரும். அலைச்சல், டென்ஷன் வெகுவாக குறையும். எதிர்த்து நின்றவர்கள் கூட ஒதுங்கி போவர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.