இன்றைய ராசி பலன்கள் (04-03-2025 செவ்வாய் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் (04-03-2025 செவ்வாய் கிழமை)

மேஷம்
மேஷ ராசி நண்ர்களே, குடும்பத்தில் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, வரும் தடைகளை தகர்த்தெறிய முடியும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக பழகவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்

கடகம்
கடக ராசி நண்பர்களே, எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி
கன்னி ராசி நண்பர்களே, உங்களை சுற்றி இருப்பவர்களிடம் சகஜமாக பழகவும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். பண தேவைகள் பூர்த்தியாகும்.மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

தனுசு
தனுசு ராசி நண்பர்களே, எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக வரும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். மனதிற்கு பிடித்தமான பொருளை வாங்க முடியும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீனம்
மீன ராசி நண்பர்களே, யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவேண்டாம். உடல் நலம் பலம் பெரும். ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.