இன்றைய ராசி பலன்கள் - 03-03-2025 திங்கட் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். நெருங்கிய உறவினர்களால் ஆதாயம் உண்டு. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்களை சுற்றி உள்ளவர்களின் சுயரூபம் புரியவரும் கவனத்துடன் பழகுங்கள்.புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதார்த்தமாக பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக்கொள்வர். புது பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துக்கள் விற்பனை குறித்து ஆலோசனை செய்வீர்கள்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் யோகம் அமையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும்.குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் பன்மடங்கு உயரும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, உடனிருப்பவர்களால் சில தொல்லைகள் வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கில் கவனம் தேவை.மற்றபடி எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். புது வாய்ப்புகள் உருவாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.மாலை 04:30 மணிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.மாலை 04:30 முதல் சந்திஷ்டமம் தொடங்குகிறது
அடுத்த இரண்டு தினங்கள் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நண்பர்களிடத்தில் சுமூக உறவு நிலவும். தூரத்து சொந்தங்களின் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும் மேல் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்.
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். புது தொழில் யோகம் உண்டு. மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். விஐபிகளின் அறிமுகம் கிட்டும்.அவர்களால் உதவிகளும் கிடைக்கும் தொழில். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே,புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவர்கள். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும்.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். கடன் வாங்குவதும் கொடுப்பதும் கவனம் தேவை.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் மன அமைதி கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்கால திட்டங்கள் கைகூடி வரும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்த்தல் நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.கடன் வாங்குவதை தவிற்க்கவும். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை காணலாம்.