பிப்ரவரி 2025 - தனுசு ராசி பலன்கள்
இந்த பிப்ரவரி மாதம் ராசிக்கு 4-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வண்டி வாகன யோகம் உண்டு சிலருக்கு வீடு மனை நிலங்கள் வாங்கும் அமைப்பும் உள்ளது கணவன் மனைவி உறவு பலப்படும்.
10-ம் வீட்டில் கேது இருப்பதால் தொழில் விருத்தி ஏற்ப்படும் புதிய முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும் மருத்துவ செலவுகள் குறையும் .
11ம் தேதி வரை புதனும் 13ம் தேதி வரை சூரினும் 2-ம் வீட்டில் பலவீனமாக தென்பட்டாலும் பிற்பாடு 3-ம் வீட்டில் சனியுடன் சூரியனும் புதனும் இணைவதால் நற்பலன்களை காணமுடியும்.
புத்திசாலித்தனமான செயல்பாடுகள் எடுத்த காரியத்தில் எதிலும் வெற்றிவாகை சூட்டுவீர்கள் . புதிய மனிதர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். பங்குச்சந்தை. ட்ரேடிங்.ஸ்டாக் மார்கெட் அதிக லாபத்தை காண்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பொன்னான மாதமிது. அரசாங்க ஊழியர்களுக்கு நினைத்தது நடக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும்.
6ம் இடத்தில் குரு இருப்பதால் ஆடம்பர செலவுகள் மட்டும் தவிர்கவும். 4-ம் வீட்டில் ராகு இருப்பதால் தாயாரின் உடல்நலனில் கவனத்தை செலுத்தவும். வீண் வாக்கு வாதங்களும் தவிர்கவும்.
7-வீட்டில் செவ்வாய் இருப்பதால் அண்டை அயலார் வீட்டு பிரச்சனைகளும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகளும் வரக்கூடும் யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடாதீர்கள்.
பிப்ரவரி 10,11,12 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவான் வழிபாடும் சித்தர்கள் ஜீவசமாதிக்கு செல்வதும் நன்மைகளை ஏற்படுத்தும்.