இறந்தவருக்கு வாய்க்கரிசி சடங்கு ஏன்?
வைணவ கருடபுராணம் கிபி 6ம் நூற்றாண்டு காலத்தவை. பல சடங்குகள், ஆவி, மேல் நோக்கி பிரயாணம், ஆன்மா என வரும் . இதே போல சிவபுராணங்களிலும் பாசக்கயிறு கதைகள் வரும். அதன் ஒரு பகுதி நம்பிக்கை இவை. பல இடங்களிலும் பலவாறாக பின்பற்றும் இறந்தவரின் சடங்குமுறைகளில் இதுவும் ஒன்று.
வைஷ்ணமுறை நம்பிக்கை:
தகனத்தின் முன்பு மகன் மற்றும் உறவினர் நெல்குத்தல் அரிசி, மற்றும் பால் ஊற்றுவது இறந்தவர் ஆன்மா வான்நோக்கி பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக. கருட புராணத்திலுள்ள சமஸ்கிரித ஆங்கிலத்தை தமிழில் , இந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் தமிழில் தருகிறேன் :
பாசக்கயிறு Astral Cord என்பது ஆன்மாவையும் உடம்பையும் இணைக்கிறது. இந்தப் பாசக்கயிறு அறுந்தவுடன், ஆன்மா பிரிந்து தனது பயணத்தை மேல்நோக்கி தொடங்குகிறது.
ஆன்மா உடலுடன் நெருக்கத்தையும் உறவையும் ஏற்படுத்தி இருந்ததால் பிரிய மறுக்கும். எமன் கயிற்றைப்பற்றி மேல் நோக்கி இழுப்பான் ! பிரிய மறுக்கும். ஆன்மா பூமியோடு இணைந்து இருக்கும் சக்தியை இழந்து மேல்நோக்கி தள்ளப்படுகிறது. திரும்பி புகமுடியாத ஆன்மா 12 அடி உயரத்திலேயே உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும். இந்த இழுபறி 1 நாள் இருக்கும் அல்லது உடலை எரித்து சாம்பலாகும் வரை ஆன்மா சுற்றிக்கொண்டே சில நாட்கள் வரை இருக்கும்.
அதனால் இறந்தவருக்கு உணவு கொடுத்து விட்டு எரிக்கிறார்கள். 8வது நாள் வேறுவழியில்லாமல் , ஆன்மா பூமியை விட்டு வான்நோக்கி செல்கிறது. அதனால் பிண்டம் (பிடித்த சாப்பாடு, வடை சோறு) 7நாட்கள் அல்லது 10,11 நாட்கள் வரை தினம் படைக்கின்றனர். நம்பிக்கைகள்.
கிறிஸ்துவத்திலும் இதே போல நம்பிக்கைகள் உண்டு. Judgement day, தீர்ப்பு நாள் என்பர். மூன்றாவது நாள் கடவுள் தீர்மானித்து சொர்க்கத்துக்கு அனுப்புவதா, அல்லது நரகத்துக்கு அனுப்புவதா என தீர்ப்பு மூன்றாவது நாள் கடவுள் கொடுப்பார்.