வீடு கட்டுபவர்கள் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்!

house-vastu-poojai
வீடு கட்டுபவர்கள் அறிய வேண்டிய வாஸ்து தகவல்கள்!

வடக்கு பார்த்த வீட்டிற்கு படிக்கட்டு எந்த மூலையில் வைக்க வேண்டும்?

 

 எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே அமைக்கும் படிக்கட்டு எந்த ஒரு உள் மூலையிலும் வரக்கூடாது.

 

 வீட்டிற்கு உள்ளே தெற்கு நடுப்பகுதி மற்றும் மேற்கு நடுப்பகுதி இவற்றில் தான் படிக்கட்டு அமைக்க வேண்டும். படிக்கட்டுக்கு கீழ் எந்த ஒரு அறையும் வரக்கூடாது.

 

வெளிப்புறம் அமைக்கும் படிக்கட்டு வடகிழக்கு மூலையை தவிர மற்ற 3 மூலையிலும் வரலாம். வெளிப்புறம் அமைக்கும் படிக்கட்டு கேண்டிலிவர் முறையில் திறந்தவெளி படிக்கட்டாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் படிக்கட்டின் கீழ் டாய்லெட், பாத்ரூம் வரக்கூடாது.

 

 படிக்கட்டு தானே என்று அலட்சியமாக இல்லாமல் சற்று கூர்ந்து கவனித்து மேலே குறிப்பிட்டுள்ளது போல் சரியான முறையில் படிக்கட்டு அமைத்துக்கொள்ளவும்.

 

 வீடு கட்டுவதற்கு எந்த திசை சிறந்தது என்று கணவரின் ஜாதகப்படி பார்க்க வேண்டுமா அல்லது மனைவி ஜாதகப்படி பார்க்க வேண்டுமா?

 

 நிச்சயமாக மனைவியின் ஜாதகப்படி தான் பார்க்க வேண்டும்.  கணவனை விட வீட்டில் அதிகமாக இருப்பது மனைவிதான்.  தவிர வீடு என்பது பூமி சம்பந்தமானது.  பூமாதேவியே ஒரு பெண்தானே.  மனையே மனைவியின் பெயரில் இருப்பது இன்னும் சிறந்தது.

 

வாஸ்து முறையில்லாத வீட்டுக்கு பரிகாரம் உண்டா?

 

சிறந்த வாஸ்து வல்லுநர்கள் பாதிப்படைந்த பகுதியை பார்த்து அதற்கேற்ற ஆலயங்களை குறிப்பிடுவர். அவ்வாறு இறைவனை சரணாகதி அடையும் பட்சத்தில் விரைவில் வாஸ்துபடி திருத்தங்கள் ஏற்படும் அல்லது நல்ல வாஸ்து பலம் உள்ள வீடு அமைந்திடும்.

 

பூஜை அறை மேற்கு திசையை பார்த்து வைக்கலாமா?

 

 பூஜை அறை என்பது வீட்டில் நிகழக்கூடிய ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கும். ஆகையால் பூஜை அறை என்பது கிழக்கை பார்த்து அமைத்தல் மிக சிறந்தது. அதுவும் தென்கிழக்கு பகுதியில் பூஜை அறையை அமைப்பது மிகப்பெரிய நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

 

வடகிழக்கில் படுக்கை அறை அமைக்கலாமா?

 

நிச்சயம் வடகிழக்கில் படுக்கையறை அமைத்தல் கூடாது.