இன்றைய ராசி பலன்கள் - (21-10-2026 புதன் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (21-10-2026 புதன் கிழமை)

மேஷம்
எதிர்பார்க்கும் விஷயங்கள் தானாகவே நடக்கும். அடுத்தவர்களை கவரும் வண்ணம் உங்கள் பேச்சு இருக்கும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷபம்
சவாலான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மிதுனம்
எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிக்கும். மதியம் 12:20 மணிவரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது.

கடகம்
குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். முன் கோபத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.மதியம் 12.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.

சிம்மம்
குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். ஆன்மீக ஆர்வம் கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் எழுச்சி பெறும்.

கன்னி
கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தெய்வ வழிபாடு சிறக்கும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்
யாரையும் முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். எதிரிகள் அடிபணிந்து போவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் எழுச்சி பெறும்.

விருச்சிகம்
குடும்ப நிதி நிலை சீரடையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு
எதிர்காலம் சார்ந்த சிந்தனை அதிகமாகும். சொந்த பந்தங்கள் சிலர் உதவி கேட்டு வருவர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மகரம்
அண்டை, அயலாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கும்பம்
மனம் தெளிவு பெறும். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம்
யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.