பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 14 முதல் தொடக்கம்!.
சிம்மம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.
இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.
கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார்.
கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.
சிம்மம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026
இதுவரை ராசியில் அமர்ந்திருந்த கேது 12-ம் இடத்திற்கும் 7-ம் இடத்தில் இருந்த ராகு 6-ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி ஆகிறார்கள் இதனால் கடந்த காலங்கள் இருந்த அசுப பலன்கள் நீங்கி இந்த ராகு +கேது பெயர்ச்சியால் பலன் பெறப்போகிறீர்கள். 6-ம் இடம் என்பது ரணருண ஸ்தானமாக இருந்தாலும்.
அசுபம் பெற்ற கோள்கள் ஆறாம் இடத்தில் அமர்ந்தால் நற்பலன்களை வழங்குவார்கள் அவ்வகையில் ராகு பகவான் ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் ராகுவால் பல நன்மைகள் உண்டாகும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும், பண சேமிப்புகள் உண்டாகும், புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு . கடன் சுமைகள் குறையும், பண சேமிப்புகள் உண்டாகும்.
அரசியல் செல்வாக்கு கூடும், புதிய பதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும், புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும், மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் கேது அமர்ந்தாலும் கேதுவால் நன்மைகள் பெற போகிறீர்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் திடீர் பணவரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்பட்டாலும் தன வரவு நன்றாக இருக்கும். வரவுகேற்ப செலவுகளும் உண்டாகும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
பரிகாரம்.
வாரந்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் சிவாலயத்தில் இருக்கக்கூடிய நவகிரக சன்னிதிகள் ராகு +கேது வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.