ரிஷபம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

rishabam-ragu-kethu-peyarchi-palangal-2026
ரிஷபம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

டிசம்பர் 5, 2026, கார்த்திகை 19-ம் தேதி சனிக்கிழமை இரவு 10:32 மணிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புப்படி ராகு+கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

இடம் மாற்றம்: ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு (அவிட்டம் 3-ம் பாதத்திலிருந்து 2-ம் பாதத்திற்கு) பெயர்ற்சியாகிறார்.

கேது பெயர்ச்சி: கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு (மகம் 1-ம் பாதத்திலிருந்து ஆயில்யம் 4-ம் பாதத்திற்கு) பெயர்ச்சியாகிறார். கால அளவு: ராகு-கேது மாற்றங்கள் சுமார் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வதாகும்.

ரிஷபம் - ராகு+கேது பெயர்ச்சி பலன்கள் 2026

கடந்த மூன்று ஆண்டுகளாக கேது 5- மற்றும் 4-ம் இடங்களில் அமர்ந்து எந்த ஒரு நற்பலன்களையும் வழங்கவில்லை.
தற்சமயம் நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியில் கேது 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலனை வழங்குவார்.

குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தொழில் வியாபாரங்கள் செடிப்படையும் நல்ல லாபத்தை பெற முடியும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகள் உருவாகும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் குடும்பத்தில் இருந்து வந்த பகைகள் மறையும் கணவன் மனைவி உறவு பலப்படும் திருமண சுப காரியங்கள் நடக்கும். வண்டி வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள், திடீர் தன வரவுகளால் பண பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

இதுவரை 10-ம் இடத்தில் அமர்ந்து வந்த ராகு பகவான் 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் இதனால் தந்தை மகனுக்குள் மனக்கசப்புகள் மனஸ்தாபங்கள் வரக்கூடும் பூர்வீகத்தை விட்டு விலகி இருக்க வேண்டி வரும் பூர்விக சொத்துக்களில் ஒரு பகுதியை விற்க வேண்டிய வரும் உணவு பழக்கத்தால் உடல் நல குறைபாடுகள் வரக்கூடும் புது நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பங்காளிகளுக்குள் தேவையில்லாத பிரச்சனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்:
மாதம் தோறும் அமாவாசை அல்லது பௌர்ணமி திதியில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் திங்கட்கிழமை அதிகாலை திருப்பதி ஏழுமலையனை தரிசனம் செய்தால் செல்வ செழிப்பு உண்டாகும் கஷ்டங்கள் குறையும் நல்லதே நடக்கும்.