ஜூலை மாதம் 2026 - மீனம் ராசி பலன்கள்

july-month-2026-meenam-rasi-palangal
ஜூலை மாதம் 2026 - மீனம் ராசி பலன்கள்

இந்த ஜூலை மாதம் செவ்வாய் பலம் பெற்று 3-ம் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் நினைத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் சகோதரர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் சகோதரர்களின் உதவிகளும் கிடைக்கும்.

5-ம் இடத்தில் குருபகவான் உச்ச பலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
கேதுவும் 6-ம் வீட்டில் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வருவீர்கள் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

12-ம் இடத்தில் ராகு இருப்பதால் வீண் விரைய செலவுகள் வரக்கூடும் கவனம். 4-ம் இடத்தில் புதன் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் பண வரவுகள் உண்டாகும் முன் பின் தெரியாத நபர்கள் உதவி செய்வார்கள் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமா அமையும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

ஜென்ம சனி நடப்பதால் தன்னிசையான முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள் தேவையின்றி கடன்கள் வாங்க வேண்டாம் மன குழப்பங்கள் இருக்கும் சற்று கவனமாக இருக்கவும்.

இம்மாதம் சூரியன் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அலைச்சல் அதிகமாக காணப்படும் உடல் நல குறைபாடுகள் உண்டாகும் அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

சுக்கிரன் 6-ம் இடத்தில் பலவீனப்படுவதால் பெண்களால் அவமானங்கள் வந்துசேரும் கவனம்.

ஜூலை 21.22.23 சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு அரச்சனை செய்து வரவும் ஐயப்ப ஸ்வாமி வழிபாடும் சிறப்பபைத்தரும் நல்லதே நடக்கும்.