நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்?- பிரஸ்மீட்டில் வைகோ.
ஜூலை மாதம் 2026 - தனுசு ராசி பலன்கள்
இந்த ஜூலை மாதம் சுக்கிரன் ஜூலை 8 மற்றும் 9-ம் ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் பெண்களால் நன்மைகள் உண்டாகும் புதிய வீடு கட்டும் யோகம் உண்டு லோன் எளிதில் கிடைக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும் உறவினர்களால் நல்ல செய்தி கிடைக்கும்.
செவ்வாய் ராசிக்கு 6'ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் காரிய தடைகள் விலகும் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறுவீர்கள் சகோதரர்களுக்குள் நல்ல இணக்கம் உண்டாகும்.
வருட கோள்களில் ராகு ராசிக்கு 3'ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண வருவாய் நன்றாக இருக்கும் கொடுத்த பணம் வசூல் ஆகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.
9-ம் ம் இடத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.
4-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் கொள்ளவும்.
வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். ஜூலை 6ம் தேதிக்கு பிறகு புதன் ராசிக்கு 7-ம் இடத்தில் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும். கூட்டுத்தொழில் நஷ்டத்தை உண்டு பண்ணும் கவனம்.
இம்மாதம் சூரியன் 8-9.ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் தந்தை மகனுக்குள் வீண் வாக்குவாதங்கள் உருவாகும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
8-ம் இடத்தில் குரு இருப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்துக்கொண்டே இருக்கும். வீண் ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
ஜூலை 15.16. தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குரு பகவானுக்கு அர்ச்சனையும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்து வாருங்கள் கால்நடைகளுக்கு உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.