ஜூலை மாதம் 2026 - விருச்சிகம் ராசி பலன்கள்
வருட கோள்களில் குருபகவான் 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் திருமண சுபயோகங்கள் நடைபெறும் தடைபட்ட குழந்தை பாக்கியம் தடையின்றி கிடைக்கும் பணம் சேமிப்புகள் உண்டாகும்.
ஜூலை 6-ம் தேதி புதன் 8-ம் இடத்தில் வக்ரகதியாக பின்னோக்கி சென்று பலம் பெறுகிறார் இதனால் காரிய தடைகள் விலகும்
திடீர் தன வரவுகள் உண்டாகும். புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
இம்மாதம் செவ்வாய் 7-ம் இடத்தில் பலவீனப்படுகிறார் இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும் அவசர முடிவுகளால் பணம் இழக்கும் அபாயம் உண்டு முன் கோபத்தை தவிருங்கள்.
4,ம் இடத்தில் ராகுபகவான் இருப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் அடிக்கடி மருத்துவ விரைய செலவுகள் வரக்கூடும் கவனம்.
கேது 10 ம் ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஏற்றுமதி தொழில்கள் லாபகரமாக அமையும்.
5ம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் வீண் விரையங்கள் தண்ட சிலவுகள் வரக்கூடும்.
சுக்கிரன் 10-ம் இடத்தில் பலவீனபடுவதால் அன்னிய பெண்களால் அவமானம் ஏற்படும் வண்டி வாகனங்கள் செலவு வைக்கும்.
இம்மாதம் சூரியன் 8-9 இடங்களில் பலவீனமாக இருப்பதால் அரசாங்க பகைகள் வரக்கூடும்.பெரிய மனிதர்களை பகைத்துக்கொள்ளதீர்கள்.
ஜூலை 13.14. சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து வரவும். தேய்பிறை அஷ்டமி திதியில் அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.