ஜூலை மாதம் 2026 - கன்னி ராசி பலன்கள்

july-month-2026-kanni-rasi-palangal
ஜூலை மாதம் 2026 - கன்னி ராசி பலன்கள்

இந்த ஜூலை மாதம் ஜூலை 4-ம் தேதி வரை சுக்கிரன் 10-ம் இடத்தில் பலவீனமாக சஞ்சாரம் செய்வதாலும் 4-ம் தேதிக்கு பிறகு 11-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்குவார் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும் தொழில் வியாபாரங்கள் நன்றாக இருக்கும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும். பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.

இம்மாதம் சூரியன் 10 மற்றும் 11.ம் இடங்களில் பலப்படுவதால் காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் கைகூடும் புதிய நட்பு மலரும் பெயர் புகழ் அந்தஸ்து அடைவீர்கள். புதனும் பலம் பெற்று 10-ம் இடத்தில் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் அபரா ஞாபக சக்தி காணப்படும் நிலுவையில் உள்ள பணிகள் விரைந்து முடிப்பீர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

6-ம் இடத்தில் ராகு இருப்பதால் திடீர் பணவரவுகளால் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் சுமைகள் குறையும். ராசிக்கு 12-ம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால் யாருக்கும் தேவை இல்லாமல் ஆலோசனைகளை வழங்காதீர்கள் அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் வேலையிலும் பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

செவ்வாய் 9-ம் இடத்தில் பலவீனப்படுகிறார் இதனால் முன் கோபம் அதிகமாக காணப்படும் சகோதரர்களிடம் அன்புடன் பழகுங்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் உண்டாகும் பூர்விக சொத்துக்களால் பிரச்சனைகளும் வரக்கூடும்.

ஜூலை 8.9.10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய புதன்கிழமைகளில் நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வரவும் பெருமாள் வழிபாடு சிறப்பை தரும் பௌர்ணமி திதியில் வீட்டில் சத்தியநாராயண பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்