ஜூலை மாதம் 2026 - சிம்மம் ராசி பலன்கள்
இந்த ஜூலை மாதம் ராசிக்கு 10-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியும் தொழில் போட்டிகள் குறையும் எதிரிகள் விலகிப் போவார்கள் சகோதரர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும்.
இம்மாதம் சுக்கிரன் பலம் பெற்று 11 மற்றும் 12 ஆம் இடங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண சேமிப்புகள் உண்டாகும் கணவன் மனைவி உறவு பலப்பப்படும்.
ஜூலை நான்காம் தேதி வரை புதன் 12-ம் இடத்தில் பலவீனமாக காணப்பட்டாலும் 4-ம் தேதிக்கு பிறகு 11-ம் இடத்தில் வக்ரகதியாக சஞ்சரிப்பதால் நன்மைகள் பல காணலாம் புதிய யுத்திகள் அறிவு திறன் மேம்படும் புத்திகூர்மையால் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்.
புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஜூலை 17-ம் தேதி வரை சூரியன் 11-ம் இடத்தில் நற்பலன்களை வழங்குவார். அரசியல் செல்வாக்கு கூடும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.
புதிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.
12-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் பண விரையங்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.
அஷ்டமச்சனி நடப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் யோசனையுடன் செயல்படவும் தேவையின்றி கடன் சுமைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
ராசிக்குள் கேதுவும் 7-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் குடும்ப உறவுகளுக்குள் அடிக்கடி பிரச்சனைகள் உருவாகும்
பண விஷயத்தில் கவனமாக இருக்கவும் யாருக்கும் ஜாமின் கையொப்பம் இடாதீர்கள்.
ஜூலை 6-7-8 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்.
பரிகாரம்|
வாரம்தோறும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதய நேரத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில் நவகிரக சூரியன் வழிபாடும் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.