இன்றைய ராசி பலன்கள் -09.06.2026 செவ்வாய் கிழமை
மேஷம்
வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். நிதி நிலைமை சீரடையும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரிய வரும். வியாபார யுக்தியால் பன் மடங்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தெய்வ பலம் கூடும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
மிதுனம்
குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். தேக நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை.தொழில் போட்டிகள் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம்
விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்ய முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வரவுக்கேற்ற சிலவுகள் உண்டு வாகனத்தில் மெதுவாக செல்லவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பேச்சுக்களால் சண்டைகள் உருவாகும்.உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.
தொழில் வியாபரங்கள் மிதமான வருமானத்தை தரும்.சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமாக இருக்கவும்.
கன்னி
குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதியினர் ஒன்று சேருவர்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உதிக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெறும்.