மே மாதம் 2026 - மீனம் ராசி பலன்கள்!
இந்த மே மாதம் சுக்கிரன் 14ம் தேதி வரை 3-ம் இடத்தில் பலவீனமாக தென்பட்டாலும் பிறகு 4-ம் இடத்தில் பலம் பெறுகிறார் கணவன் மனைவி உறவு பலப்படும்.
புதிய வண்டி வாகன யோகமும் உண்டாகும். பண சேர்க்கை இருக்கும்.
மே 15ம் தேதி வரை சூரியன் 2-ம் வீட்டில் பலவீனமாக இருந்தாலும் 15-ம் தேதி 3-ம் வீட்டில் பலப்படுகிறார் அந்தஸ்த்தும் கெளரவமும் கிடைக்கும் முகத்தில் புதுப்பொலிவு காணப்படும்.
கேது ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும்
நினைத்தது நடக்கும்.
பண தேவைகள் பூர்த்தியாகும். புதிய வேலை வாய்புகள் உருவாகும். ராசிக்கு 12-ம் இடத்தில் ராகு இருப்பதால் வீண் விரைய செலவுகள் உண்டாகும்.
குடும்ப உறவினர்களுக்கு பண உதவிகள் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடும்.
யாரையும் முழுமையாக நம்பிவிடாதீர்கள். ஜென்மச்சனி நடப்பதால் பிடிவாத குணத்தை தளர்க்கவும். மண் பொன் ஆசை அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் வரும். பூர்வீகத்தை விட்டு தள்ளி இருக்கும் சூழல் உருவாகும்.
இம்மாதம் செவ்வாய் 1 - மற்றும் 2-ம் இடத்தில் பலவீனமாக சஞ்சரிப்பதால் அவசர முடிவுகள் தவிர்க்கவும் முன் கோபம் இதனால் பின்விளைவுகள் உண்டாகும்.
குருபகவான் 4-ம் வீட்டில் இருப்பதல் மனகுழப்பம் காணப்படும் தாயாரின் உடல் நலத்தில் பிரச்சனைகள் உண்டாகும் மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கும்.
இம்மாதம் புதன் 2 மற்றும் 3-ம் இடங்களில் பலவீனமாக சஞ்சரிப்பத சஞ்சரிப்பதால் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்.
சோம்பல் சுறுசுறுப்பின்மை காரணமாக அவப்பெயர் உண்டாகும்.
மே 28 -29-30 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம் தோறும் வருகின்ற சனிக்கிழமைகளில் சிவாலயத்தில் உள்ள நவகிரக வழிபாடு செய்து வரவும் சனிபகவான் வழிபாடு சிறப்பைத்தரும் நல்லதே நடக்கும்.