மே மாதம் 2026 - கும்பம் ராசி பலன்கள்!
5-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும் பண சேமிப்புகள் உண்டாகும்.
இம்மாதம் சுக்கிரன் 4 மற்றும் 5-ம் இடங்களில் பலத்துடன் சஞ்சரிப்பதால் புதிய வாகன யோகம் உண்டாகும் சிலருக்கு வீடு கட்டும் அமையும் உண்டு லோன் எளிதில் கிடைக்கும் கொடுத்த பணம் வசூல் ஆகும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.
மே மாதம் 11-ம் தேதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருந்து 3-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் நன்மை பயக்கும் தன்னம்பிக்கை பிறக்கும் போட்டித் தேர்வு வெற்றி பெறுவீர்கள் சகோதரர்களுக்குள் நல்லிணக்கம் பிறக்கும்.
இம்மாதம் 15ஆம் தேதி வரை சூரியன் மூன்றாம் இடத்தில் பலத்துடன் சஞ்சரிப்பதால் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும் அவர்கள் ஆதாயம் கிடைக்கும் அரசியல் செல்வாக்கு கூடும் பட்டம் பதவிகள் கிடைக்கும்.
மே 17-ம் தேதி வரை புதன் 3-ம் இடத்தில் பலவீனமாக காணப்பட்டாலும் மே 15 ஆம் தேதிக்கு பிறகு 4-ம் இடத்தில் பலம் பெறுகிறார் புதிய யுக்திகளால் காரிய தடைகள் விலகும் கூட்டுத் தொழில் சிறப்பை தரும் அபார ஞாபக சக்தி உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் நல்ல மதிப்பெண்களும் பெறுவார்கள்.
2-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும் குடும்ப உறவு முறைக்குள் தேவையில்லாத விவாதங்கள் தவிர்க்கவும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் மிகுந்த கவனத்தை செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.
ராசிகுள் ராகுவும் 7-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் எந்த ஒரு விஷயத்திலும் முடிவுகள் எடுக்க தடுமாற்றம் உண்டாகும் அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மே 25.26.27 சந்திராஷ்டமம்.
பரிகாரம்!
வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபாடு செய்து வரவும் அமாவாசை பெளர்ணமி திதியில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.