மே மாதம் 2026 - தனுசு ராசி பலன்கள்!
இந்த மே மாதம் வருட கோள்களில் குருபகவான் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் திருமண சுப காரியங்கள் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும். தன சேமிப்புகள் உண்டாகும்.
மே மாதம் 15-ம் தேதி வரை புதனும் சூரியனும் 5-ம் வீட்டில் பலவீனமாக தென்பட்டாலும் 15-ம் தேதிக்குப் பிறகு 6-ம் இடத்தில் இவ்விரு கோள்களும் பலம் பெறுகின்றன இதனால் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் அந்தஸ்தும் கௌரவம் கிடைக்கும் புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள் கூட்டுத்தொழில் மூலமாக நல்ல லாபத்தை பெறுவீர்கள் அரசியல் செல்வாக்கு கூடும் பதவிகள் கிடைக்கும்.
3-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாடு விசா மற்றும் வேலை கிடைக்கும்.
9-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்களால் உடல்நலக் குறைபாடுகள் வரக்கூடும் தேவையில்லாத விவகாரங்கள் தலையிடாதீர்கள்.
இம்மாதம் சுக்கிரன் 6 மற்றும் 7-ம் இடங்களில் பலவீனமாக காணப்படுவதால் பெண்களால் அவமானங்களும் பிரச்சனைகளும் வரக்கூடும் பழைய வண்டி வாகனங்கள் செலவு வைக்கும் கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகும் கவனம்.
இம்மாதம் செவ்வாயும் 4 - மற்றும் ஐந்தாமிடங்களில் பலவீனப்படுவதால் அவசர முடிவுகள் தவிர்க்கவும் சகோதரர்களுக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது வீண் விவாதங்கள் தவிர்க்கவும்.
4-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் வீடு மனை சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் கவனம் செலுத்தவும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தலை தூக்கும்.
பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் வரக்கூடும் கவனம்.
மே 21-22.23 சந்திராஷ்டமம்.
பரிகாரம்|
வாரந்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குரு பகவான் வழிபாடும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்து வரவும் கால்நடைகளுக்கு உணவு வாங்கி கொடுங்கள் நல்லதே நடக்கும்.