மே மாதம் 2026 - விருச்சிகம் ராசி பலன்கள்!

may-2026-rasi-palangal
மே மாதம் 2026 - விருச்சிகம் ராசி பலன்கள்!

மே மாதமும் 15-ம் தேதி சூரியனும் புதனும் ராசிக்கு 6-ம் இடமான உபஜய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் நன்றாக இருக்கும் தன்னிச்சையாக எந்த முடிவுகளும் எடுக்க முடியும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள் அரசியல் செல்வாக்கு கூடும் புதிய பதவிகள் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகள் லாபகரமாக அமையும் கூட்டுத் தொழில் மூலமாக நல்ல வருமானம் பெறுவீர்கள்.

15-ம் தேதிக்கு பிறகு இவ்விரண்டு கிரகங்களும் பலவீனமாகும்.

மே 11-ம் தேதி ராசிக்கு 6-ம் இடத்திற்கு செவ்வாய் வருவதால் புதிய தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடித்தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

இம்மாதம் 14ஆம் தேதி சுக்கிரன் 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்வதால் அடிக்கடி விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

வருட கோள்களில் கேது 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

4-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் அன்னையிடம் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள்.
வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் டென்ஷன் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
5-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். கடன் சுமைகளில் மாட்டி கொள்ளாதீர்கள்.

மே 19.20.21.சந்திராஷ்டமம்.

பரிகாரம்
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவும் சஷ்டி & கிருத்திகை விரதம் இருக்கவும் நல்லதே நடக்கும்.