மே மாதம் 2026 - கன்னி ராசி பலன்கள்!

may-2026-rasi-palangal
மே மாதம் 2026 - கன்னி ராசி பலன்கள்!

இந்த மே மாதம் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும் கடினமான வேலைகளும் சுலபமாக முடிக்க முடியும்
வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

மே 14ம் தேதி வரை சுக்கிரன் 9-ம் இடத்தில் பலம் பெற்றிருப்பார். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் பண சேர்க்கை உண்டாகும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் குடும்ப உறவுகளால் நன்மைகள் நடக்கும் 14 ஆம் தேதிக்கு பிறகு பத்தாம் இடத்தில் சுக்கிரன் பலம் இழந்து காணப்படுவார் கவனமும் நிதானமும் அவசியம்.

மே 15-ம் தேதி வரை புதன் 8-ம் இடத்தில் பலம் பெற்று நன்மைகளை வழங்குவார். புதிய நபர்களின் சந்திப்பு நிகழும்
நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

இம்மாதம் செவ்வாய் 7 மற்றும் எட்டாம் இடங்களில் பலவீனப்படுவதால் முன்கோபத்தை தவிர்க்கவும் அவசர முடிவுகள் வேண்டாம் எதையும் யோசித்து நிதானமாக கையாளவும்.

இம்மாதம் சூரியன் 8 மற்றும் 9-ம் இடங்களில் பலவீனப்படுவதால் அரசாங்க பகை உண்டாகும் அரசியல் செல்வாக்கு குறையும் தேவையில்லாத வம்புகளில் சிக்கக்கூடும் கவனம்.

ஏழாம் ஸ்தானத்திலிருந்து சனிபகவான் கண்டகச்சனியாக வலம் வருவதால் பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும் யாருக்கும் ஜாமீன் கருத்துக்கள் போடாதீர்கள் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனைகள் தலை தூக்கும் கவனம்.

ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் கேதுபகவான் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளுவீர்கள் சுபச் செலவுகள் உண்டாகும் உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும் கவனம்.

பத்தாம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

மே 15.16.சந்திராஷ்டமம்.

பரிகாரம்|
வாரந்தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் நவகிரக சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வரவும் புதன்கிழமை நாளில் பெருமாள் வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்.