மே மாதம் 2026 - கடகம் ராசி பலன்கள்!
இந்த மே மாதம் சூரியன் 10-மற்றும் 11-ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் அரசியல் செல்வாக்கு கூட்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் புதிய பதவிகள் பொறுப்புகள் வகிப்பீர்கள் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.
சுக்கிரன் 11- மற்றும் 12ம் இடங்களில் பலம் பெற்றிருப்பதால் சுப விரைய செலவுகள் உண்டாகும். அடிக்கடி விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
இம்மாதம் புதனும் 10 - மற்றும் 11-ம் இடங்களில் பலப்படுவதால். காரிய தடைகள் விலகும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
திடீர் தன வரவுளால் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் நடக்கும். இம்மாதம் 11-ம் தேதிக்கு மேல் செவ்வாய் 10-ம் இடத்தில் பலப்டுவதால் தைரியம் தன்னம்பிக்கை பிறக்கும் விளையாட்டு போட்டிகளில் சாதிப்பீர்கள் பட்டம் புகழ் கிடைக்கும்.
12-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் வீண் செலவுகளை குறைக்கவும் தேவையின்றி ஆடம்பரத்துக்காக கடன் வாங்காதீர்கள்.
9-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து பிரச்சனைகள் தொழில் வியாபார விஷயமாக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல நேரிடும் அலைச்சல் அலைகழிப்பு உண்டாகும்.
அஷ்டம ஸ்தானமான 8-ல் ராகுவும் 2ம் வீட்டில் கேதுவும் இருப்பதால் மனக்குழப்பங்கள் உண்டாகும். நம்பிக்கை துரோகங்கள் சில மன வலிகள் உண்டாகும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். மருத்துவ விரையங்கள் வரக்கூடும் கவனம்.
மே 10.11.12.சந்திரராஷ்டமம்.
பரிகாரம்
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயத்தில் இருக்கும் நவகிரக சூரியன் வழிபாடும் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வரவும்
பிரதோஷ வழிபாடும் சிறப்பை தரும் நல்லதே நடக்கும்