மே மாதம் 2026 - மிதுனம் ராசி பலன்கள்!

may-2026-rasi-palangal
மே மாதம் 2026 - மிதுனம் ராசி பலன்கள்!

இந்த மே மாதம் சுக்கிரன் ராசிக்கு 12-மற்றும் 1-ம் இடங்களில் பலம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் பிறக்கும்
தன வரவுகள் நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும். உறவினர்களுக்குள் இருந்து வந்த பகை மறையும் நட்பு மலரும்.

இம்மாதம் செல்வாயும் பலம் பெற்று 10 - மற்றும் 11-ம் இடங்களில் சஞ்சரிப்பதால் காரிய தடைகள் விலகும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்
தொழில் போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

மே 15-ம் தேதி வரை சூரியன் 11-ம் இடத்தில் பலம் பெறுவதால் அரசாங்க செல்வாக்கு கூடும் புதிய பதவிகள் கிடைக்கும் புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.

புதனும் மே 15-ம் தேதி வரை 11-ம் வீட்டில் பலமாக காணப்படுவார். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்
பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும். கூட்டு தொழில் சிறப்படையும்.

வருட கோள்களில் சனிபகவான் 10-ம் இடத்தில் பலப்படுவதபலப்படுவதால் புதிய தொழில்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

3-ம் இடத்தில் கேது இருப்பதால் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோவில் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ராசிக்குள் குருபகவான் பயணிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.
ராசிக்கு 9-ம் இடத்தில் ராகு இருப்பதால் தந்தை மகன் உறவுக்குள் விரிசல்கள் விழம். வீண் விவதாங்களை தவிர்க்கவும்.
மே - 8.9.10 ஆகிய தேதிகளில் சந்திராஷ்மம் உள்ளது கவனம்.

பரிகாரம்
வாரம் தோறும் வாரக்கூடிய சனிக்கிழமைகளில் வினாயகர் வழிபாடு செய்து வரவும். சங்கட சதுர்த்தி நாளில் சர்க்கரை பொங்கல் பக்தர்களுக்கு வழங்கலாம் நல்லதே நடக்கும்.