இன்றைய ராசி பலன்கள் - 24.04.2026 வெள்ளி கிழமை
மேஷம்
பொறுமையும் நிதானமும் அவசியம்.முன் கோபத்தை தவிற்த்து எதிலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கவும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷபம்
அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு செயல்படவும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற நட்பு வட்டாரங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
உற்சாகமாக காணப்படுவீர்கள் காரிய தடைகள் விலகும். உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடகம்
பழமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.
சிம்மம்
நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெறும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் கூடும்.புதிய முதலீடுகளை தவிற்க்கவும்.
கன்னி
சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். கடன் குறையும். சிறுக சிறுக அடைபடும்.கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
துலாம்
தள்ளி போன காரியங்கள் உடனடியாக முடியும். உறவினர்கள் சிலர் அன்பு பாராட்டுவர். எதிர்பாராத செலவுகள் வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் ராச
இன்று மனக்குழப்பம் அதிகமாக காணப்படும் யாருக்கும் வாக்கறுதிகளை வழங்க வேண்டாம்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
தனுசு
உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை அமையும். மனச்சுமை குறையும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.யாருக்காககவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
மகரம்
குடும்பத்தில் நல்ல காரியம் நடைபெறும். திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.புதிய முயற்சிகள் தள்ளி போகும். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்பம்
பிராத்தனைகள் நிறைவேறும். உற்றார்,உறவினர்கள் இல்லம் நாடி வருவர். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.தொழில் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி வரும்.
மீனம்
பொருளாதார நிலை சீரடையும்.எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும் நினைத்த காரியம் நடக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் நண்பரால் சில அனுகூலம் உண்டு. தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும்.