தொழில் வாஸ்து ஜோதிட பலன்கள்!

job-professional-jothidam

தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த திசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,

தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம்.

நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம்,நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம்.

பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.