இன்றைய ராசி பலன்கள் - 30.03.2026 திங்கள் கிழமை
மேஷம்
அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். எதிரிகள் விலகி நிற்பர். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள முடியும்.
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மனம் வலிமை கூடும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
வாராக்கடன் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
கடகம்
சொந்த பந்தங்கள் ஆதரவாக செயல்படுவர். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். கொடுத்த வாக்கை காப்பற்ற முடியும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிற்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனம் தேவை.
புதிய முதலீடுகள் வேண்டாம்.
சிம்மம்
குடும்ப பாரம் அதிகமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும். பண விரையங்கள் உண்டாகும்.ஆடம்பர சிலவுகளை குறைக்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
கன்னி
நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். முன் கோபத்தை குறைக்கவும்.பழைய கடனை தீர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம்
மனம் தியானத்தில் ஈடுபாடு கொள்ளும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் இருக்கும். திட்டமிடாத செலவினங்களை சமாளிக்க வேண்டிவரும். வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டு குழந்தைகளின் ஆசைகளை நிறைவு செய்வீர்கள் .தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
குடும்ப பொருளாதார நிலையில் சறுக்கல் இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் இருக்கும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
தனுசு
இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். நட்பு வழியில் சில தொந்தரவுகள் வரும். பணத்தேவைகள் குறையும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம்.யாருக்காககவும் உங்களை மாற்றிக்கொள்ள முயற்ச்சி செய்யாதீர். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
கும்பம்
முக்கிய காரியங்களை தாமதமின்றி முடிக்க முடியும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும் . மறைமுக விமர்சனமும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். பெரிய மனிதர்களை பகைத்து கொள்ளாதீர்கள்.உத்யோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப பணிகளை தனி ஆளாக பார்க்க வேண்டி வரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். காரிய தடை விலகும்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். புதிய முதலீடுகளால் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும்.