தமிழ்ப் புத்தாண்டு 2026 - கும்பம் ராசி பலன்கள்

tamil-new-year-2026-kumbam-rasi-palangal
தமிழ்ப் புத்தாண்டு 2026 - கும்பம் ராசி பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டு வசந்த ருது-பராபவ வருடம். செவ்வாய்க்கிழமையில் சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

சதய நட்சத்திரம் ராகுவின் சாரத்தில் இருப்பதால் ராகு வெளிநாடுகளை குறிப்பதாலும் செவ்வாய் போருக்கு காரகம் என்பதாலும் வெளிநாடுகளில் அடிக்கடி உரிமை போர்களும் ஆர்பாட்டங்களும் நடக்கும். பெரிய பேரழிவுகள் உண்டாகாது.

உணவு தானியங்கள் விவசாயம் தழைத்தோங்கும். மக்களிடம் பொருளாதார முன்னேற்றம் கணப்படும் ஆடம்பர பொருட்கள் மீது மக்களுக்கு ஆசை அதிகரிக்கும். தனி நபர் கடன்கள் அதிகமாகும். விஞ்ஞான வளர்ச்சி அபரிதமாகும். தொழில் வளம் பெருகும் புதிய வேலை வாய்புகள் உருவாகும்.
ஏற்றமதி இறக்குமதி சிறப்படையும்.

உங்கள் ராசிக்கு குருபகவான் 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் நன்மைகள் பல காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும் புதிய தொழில்கள் மூலமாக லாபம் பன்மடங்கு உயரும் நீண்ட நட்களாக இழுபறியில் இருந்துவந்த வேலைகள் முடிவுக்கு வரும்.

வாகனங்கள் சொத்துக்கள் வாங்க முடியும். வெளியில் கொடுத்து வராமல் இருந்த தொகை கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும். ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறக்கூடிய குருபெயர்ச்சியில் குரு 6-ம் ஸ்தானமான ருண ஸ்தானத்துக்கு வருவது சிறப்பில்லை
ஏற்ற தாழ்வுகள் வரக்கூடும் கவனம்.

சனிபகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண விவகாரங்கள் கவனத்துடன் இருக்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம் கணவன் மவைிக்குள் மன ஸ்தாபங்களும் ஈகோ பிரச்சனைகளும் தலைத்தூக்கும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதால் நன்மைகள் உண்டாகும்.
பங்களிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் தலைதூக்கும். கோர்ட் கோஸ் என அலைகழிப்படுவீர்கள்.

சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுத்து போகவும். முன் கோபத்தை தவிர்கவும். ராகு ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் காணப்படும் முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்ப்படும் .அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.

வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் காணப்படும் வேலை மாற்றம் செய்யாதீர்கள். கேது 7-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சோம்பல் அதிகமாக காணப்படும் வேலைக்கு போகும் எண்ணங்கள் இருக்காது.

வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும் வீண் ஆடம்பர செலவுகள் தவிர்கவும். ஆன்மீக பயணங்கள் சுப விரையங்கள் ஏற்ட்டாலும் மன அமைதி கிடைக்கும் .
டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறும் ராகு + கேது பெயர்ச்சியில் கேது 6-ம் இடத்துக்கு பின்னோக்கி வருவது சிறப்பான பலன்களை வழங்கும்.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வேலை வாய்புகள் உருவாகும்.

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிளமைகளில் நவகிரக கேது வழிபாடும் சதுர்த்தி தினத்தில் விக்ன வினாயகருக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.