கார்த்திகை தீப திருநாள் செய்யக் கூடாதவை?
நம்மிடம் போன வருஷம் பயன்படுத்திய பழைய அகல் விளக்குகள் இருந்தாலும் 6 புதிய அகல் விளக்குகள் மட்டுமாவது வாங்குவது நல்லது.
மண் அகல் விளக்குகளுடன், நம் வீட்டிலுள்ள மற்ற (பித்தளை, வெள்ளி, செம்பு) விளக்குகளையும் ஏற்றுவது நல்லது.
புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4 மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும்.
இந்த முறையில் செய்வதால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்து விடாமல் இருக்கும். 4 மணி நேரம் கழித்து அதை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியத்தை வெயில் படும் இடத்திலே காயவைத்து எடுக்க வேண்டும்.
பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும்.
அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும்.நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.
காய்த்த மண் அகல் விளக்குகளை எடுத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். . திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
சில சந்தானம் நிறம் இல்லாமல் இருக்கும். நிறம் கிடைக்க சிறிது மஞ்சள் தூள் கலந்து பயன் படுத்தவும்.
எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்ற வேண்டும் என்பது அவசியம் இல்லை.
காமாட்ஷி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது.
மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
எண்ணெய் ஊற்றிய பின்தான் திரி போடவேண்டும். பஞ்சு திரி மிக மெல்லிதாக இருந்தால் இரு திரியை ஒன்றாக்கி ஒரே திரியாக போடலாம்.
விளக்கை தரையில் வைக்காமல் ஒரு சிறு தட்டின் மீதோ , வெற்றிலை மீதோ,ஜவாழை இலையை சதுரமாக வெட்டி அதன் மீதோ வைக்கலாம்.
தீபங்கள் அனைத்தையும் வாசலில் ஏற்றி பிறகு வீட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்வது மகா லக்ஷ்மியை நம் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
சாயந்திரம் வாசல் தெளித்து அலம்பி, அழகான கோலங்கள் போட்டு அதன்மீது விளக்குகளை வையுங்கள்.
பச்சை அரிசியை முதலிலேயே ஊற வைத்து கோலம் போட வேண்டும். நேரம் இல்லை என்றால் அரிசிமாவு கொண்டு கோலம் போடவும்.
காலையிலேயே தலைவாசல் படிக்கு மேலே மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தீபொறிகள் கங்கையில் விழுந்து 6 குழந்தையாக , முருகப் பெருமான் தோன்றியதால், சிவபெருமானுக்கு பொரி உருண்டை செய்து நிவேத்தியம் செய்வது விசேஷம்.
முருகனுக்கு உகந்த நெய் அப்பம், அடை, கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யலாம்.
சில வீடுகளில் மாவிளக்கு எடுப்பதும்,கொழுக்கட்டையை அகல் விளக்கு போல் செய்து 6 தீபமாக ஏற்று வழிபடுவதும் உண்டு.
குத்து விளக்கு பூஜை கார்த்திகை தீபத்தன்று செய்வது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.குத்து விளக்கு தண்டு பகுதியில் பூ அல்லது மஞ்சள் கயிறு சாற்றி வழிபடவும்.
கார்த்திகை திருநாள் சிவபெருமானுக்கும், முருகனுக்கும் உகந்த நாள். முழுமுதல் கடவுளான விநாயகரை முதலில் வழிபட வேண்டும் .
மஞ்சளால் பிடித்த விநாயகர் பூஜைக்கு ஏற்றது. பிறகு சிவபெருமான் ,முருகன் படத்திற்கு அல்லது விக்கிரகங்களுக்கு சந்தானம்,குங்குமம் வைத்து நமக்கு தெரிந்த மந்திரங்கள்,108போற்றி சொல்லி வாசனை மிகுந்த பூவால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
நம்மால் முடிந்த நிவேதனங்களை செய்து கார்த்திகை தீபத்தை சிறப்பாக கொண்டாடலாம்.