Breaking News :

Friday, July 19
.

உலகின் மோசமான 10 உணவுகள் எது?


உணவு என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகும். உணவு இல்லாமல் உலகில் எந்த உயிரினத்தாலும் வாழ முடியாது.

கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்களில் தொடங்கி உலகின் மிகப்பெரும் உயிரினமான நீலத்திமிங்கலம் வரை உணவில்லாமல் எந்த உயிரினமும் இங்கு வாழ முடியாது.

மனிதனின் அறிவின் வளர்ச்சி காரணமாக அனைத்து விஷயங்களிலும் புதிது புதிதாக ஏதோ ஒன்றை கண்டுப்பிடித்து கொண்டே வருகிறோம். அப்படிப்பட்ட நாம் நமது அத்தியாவசிய தேவையான உணவை மட்டும் விட்டு விடுவோமா?

உணவானது இதுவரை அதிகபடியான வளர்ச்சியை கண்டுள்ளது. நாம் வாழும் இடத்தையும், கலாச்சாரத்தையும், தட்ப வெப்ப சூழ்நிலையையும் பொறுத்து உண்ணும் உணவானது மாறுப்படுகிறது. அப்படியான இந்த உணவு மேம்பாட்டில் சில விசித்திரமான பயமுறுத்தும் உணவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படியான 10 உணவுகளை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

01. ஜப்பானின் ஃபுகு உணவு:

மக்கள் அனைவரும் தினமும் உணவை சாப்பிடும்போது இதை சாப்பிடுவதால் இறந்துவிடுவோமா என பயப்பட வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் ஜப்பானிய உணவான ஃபுகு உணவை சாப்பிட நினைத்தால் உங்கள் உயிரை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கும்.

ஃபுகு என்பது ஜப்பானில் உள்ள பாபர் பிஷ் என்னும் மீனை கொண்டு செய்யப்படும் உணவாகும். இதில் பயப்பட கூடிய விஷயம் என்னவென்றால் அந்த மீனின் உடலில் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் இருக்குமாம். இந்த விலையுயர்ந்த உணவை தயாரிக்க அதை சமைப்பவர்களுக்கு பல வருடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காகிதம் போல் வெட்டப்பட்டு வறுக்கப்படும் அந்த மீனை சமைக்கும் போது சிறு பிழையை ஏற்படுத்தினால் கூட அது உண்பவரை பரலோகத்துக்கு அனுப்பிவிடும். இந்த கொடிய மீனின் சுவையை சுவைத்து பார்க்க விரும்புபவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலக்கட்டங்களில் ஜப்பான் சென்றால் இதை சுவைக்கலாம்.

02. கம்போடியாவின் வறுத்த சிலந்தி:

கம்போடியா முழுவதும் பிரபலமாக கிடைக்கும் உணவு இந்த வறுத்த சிலந்தி ஆகும். ஆனால் ஸ்கூன் நகர் இந்த வறுத்த சிலந்திக்கு பிரபலமான பகுதியாகும். பூண்டு எண்ணெயில் வறுத்தெடுக்கப்படும் இவை கம்போடியர்களின் நொறுக்கி தீனியாகும். இந்த சிலந்தி உண்ணும் முறை என்பது கெமூர் ரூஜின் என்ற அரசின் காலத்தில் கிராமவாசிகள் உணவுக்கு மாற்று வழியாக இதை கண்டுப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதுவே தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த சிலந்திகள் பெரும்பாலும் அவசரமாக வேலைக்கு செல்பவர்களுக்கும் விரைவான சிற்றுண்டியை தேடும் பயணிகளுக்கும் விற்கப்படுகின்றன.

இந்த சிலந்திகளில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதுடம் இது உண்பவரின் அழகை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

03. லாங்ஹார்ன் காளை மற்றும் ப்ரைரி சிப்பிகள்:

ப்ரைரி சிப்பி என்னும் உணவானது லாங்ஹார்ன் என்னும் வகையை சேர்ந்த காளையை சமைத்த கறியுடன் சேர்த்து சமைக்கப்படுகிறது. இது ராக்கி மவுண்டன் சிப்பிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

உண்மையில் இந்த சிப்பிகள் மது அருந்தியபின் ஏற்படும் ஹேங் ஓவரை சரி செய்யவும் பயன்படுகிறது. நாடு முழுவதும் கால்நடை வளர்ப்புகள் அதிகமாக இருப்பதால் கனடாவில் காளை உணவாக பயன்படுத்தப்படுகிறது.
கல்கரியில் அமைந்துள்ள பஸார்ட்ஸ் என்னும் உணவகம் இந்த உணவுக்கு பெயர் பெற்றது.

இவர்கள் மூலிகைகள், மசாலாக்கள், சாஸ்கள் கலந்து இந்த உணவை தயாரிக்கின்றனர். கோடை காலத்தில் அங்கே சென்றால் கண்டிப்பாக நமக்கு அங்கே காளை கறியும் ப்ரைரி சிப்பிகளும் கிடைக்கும்.

04. பிலிப்பைன்ஸில் உள்ள பாலுட்:

முட்டை என்பது உலகில் உள்ள அனைவருமே உணவிற்கு பயன்படுத்தும் பொதுவான உணவாகும். முட்டையானது ஒவ்வொரு நாட்டை பொறுத்து கோழி, வாத்து என மாறுப்படும். ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு படி மேலே சென்று உயிராகும் கருவை சமைத்து உண்கின்றனர்.

வாத்து முட்டையில் பாதி உருவான வாத்து கருவை சமைத்து உண்கின்றனர். அதற்கு சுவையூட்ட மிளகாய், பூண்டு மற்றும் வினிகர் சேர்க்கின்றனர். முட்டையின் உள்ளே இருக்கும் குட்டி வாத்தானது அவித்து அப்படியே தின்னப்படுகிறது. இது ஒரு தெரு உணவாக உள்ளது. இதனுடன் சிலர் பீர் என்ற மதுபானத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

05. ஸ்காட்லாந்தில் உள்ள ஹக்கிஸ்:

ஸ்காட்லாந்தில் தேசிய உணவாக பார்க்கப்படும் உணவு ஹக்கிஸ் ஆகும். இந்த உணவு ஆடுகளின் இதயம், கல்லீரல் மற்றும் நுரையீரலில் வெங்காயம், மசாலா பொருட்கள் போடப்பட்டு செய்யப்படுகின்றன. பாரம்பரியமாகவே ஆட்டின் வயிற்றில் இந்த உணவுகள் அடைக்கப்பட்டு சமைக்கப்படுகின்றன. இந்த உணவு 1400 களில் ராபர்ட் பர்ன்ஸ் என்னும் தினத்தில் முக்கிய உணவாக மக்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக இந்த உணவை பிசைந்த உருளைகிழங்கோடு சேர்த்து உண்கின்றனர். கூடவே அருந்துவதற்கு ஸ்காட்ச், விஸ்கி போன்ற மதுப்பானங்களையும் சேர்த்துக்கொள்கின்றனர். இந்த ஹக்கிஸ் அங்கே மளிகை கடைகளில் கூட சமைக்க கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகமாக உள்ளது.

06. தென் கொரியாவின் சன்னக்ஜி:

தென் கொரியாவில் ஆக்டோபஸ் கொண்டு தயாரிக்கும் உணவின் பெயர்தான் சன்னக்ஜி. பொதுவாக ஆக்டோபஸ் அளவை பொறுத்து சிறியதாக நறுக்கப்பட்டு பச்சையாகவோ அல்லது நல்லெண்ணெய் சேர்த்தோ உண்ணப்படுகிறது.

இது ஒரு புதுமையான உணவாகும். சிலர் ஆக்டோபஸை உறிஞ்சி உண்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு இது தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு திணறலையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்துகிறது. இதனால் இந்த உண்வை சாப்பிடுவதே மிகப்பெரிய ரிஸ்க் ஆகும்.

07. மெக்ஸிகோவின் எஸ்காமோல்ஸ்:

இது பார்ப்பதற்கு ஒரு பருப்பு கூட்டு போல தெரியலாம். ஆனால் இந்த உணவு எறும்பின் லார்வாக்களால் செய்யப்படுகிறது. இதனால் பெரும்பாலும் இந்த உணவு “இன்செக்ட் கேவியர்” என்று அழைக்கப்படுகிறது.

எஸ்காமோல்ஸ் மெக்ஸிகோவில் உள்ள சுவையான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இந்த லார்வாக்கலின் முட்டைகள் கற்றாழை போன்ற செடிகளின் வேர்களில் எறும்புகள் மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் சிறிய லார்வாக்களை கொண்டு டகோஸ், ஆம்லெட்ஸ் போன்ற உணவுகள் செய்யப்படுகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் வெண்ணெய் சேர்த்து வறுக்கப்படும்போது மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் உள்ளதாக கூறப்படுகின்றன.
மேலும் இது சத்தான உணவு என்று கூறப்படுகிறது.

08. ஐஸ்லாந்தை சேர்ந்த ஹாகர்ஸ்:

அழுகிய மீன்களை எந்த மனிதரும் சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் க்ரீன்லாந்தில் புது ரக சுறா மீன்களை அழுகாமல் சாப்பிட்டால் அது நமக்கு விஷமாக மாறும். அவர்கள் சுறாமீனை அழுக செய்வதன் மூலம் அது நொதித்து உண்ணக்கூடியதாக மாறுகிறது. அதில் கொஞ்சம் அம்மோனியா மணமும் அதே சமயம் மீன் சுவையும் கிடைக்கிறது. முதல் முறை இந்த மீனை உண்பவர்கள் அதை விருப்பமின்றியே உண்கின்றனர். ஐஸ்லாந்தில் இந்த ஹாக்கர்கள் வருடம் முழுவதும் கிடைக்கிறது. பொதுவாக இவை சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன.

09. அமெரிக்காவின் மூளை சாண்ட்விச்:

அமெரிக்காவின் சில பகுதிகளில் குறிப்பாக ஒஹியோ நதி பள்ளத்தாக்கில் புதிய உணவை விரும்புவோர்க்காக ஒரு புது உணவு கிடைக்கிறது. கன்றுகள் மற்றும் பன்றிகளின் மூளையில் இருந்து உணவு செய்யும் பழக்கத்தை ஜெர்மனி மற்றும் ஹாலந்தில் குடியேறியவர்கள் அறிமுகப்படுத்தினர். தற்சமயம் இது அமெரிக்க உணவாக மாறியுள்ளது. இந்த அதிக கலோரிகளை கொண்ட மூளை சாண்ட்விஜ் வெங்காயம் மற்றும் ஊறுகாய் கொண்டு பரிமாறப்பட்டது. இந்த மூளையானது சுவையாகவும் மிருதுவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

10. இத்தாலி காசுமார்சு:

கீரிம் போல் இருக்கும் மென்மையான, ஆடுகளின் பாலாடை மூலம் செய்யப்படும் உணவுதான் இத்தாலி காசுமார்சு. கேட்கும்போது இவ்வளவு இனிமையாக இருந்தாலும் அந்த மட்கோக்களில் ஆயிரக்கணக்கான புழுக்கள் இருக்கின்றன. இது தெரிந்தும் சாப்பிடும் மக்கள் மிகவும் தைரியசாலிகள்தான். பெக்கரினோ என்னும் அந்த பாலடையானது உணவின் மேற்பரப்பில் ஈக்கள் முட்டையிட வழி வகுக்கிறது. இதில் உள்ள முட்டைகள் குஞ்சு பொறித்து லார்வாவாக பாலாடைக்கட்டி வழியாக வெளியே வருகின்றன.

இது அந்த கொழுப்பை மேலும் மென்மையாக்குகிறது. இது பாலாடையின் சுவையை மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.