தன் துணையை எக்காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத கணவன், எவ்வித குடும்பத் தகராறுகளிலும் தன் மனைவியின் தனிப்பட்ட குணநலன்களை மோசமாக விமர்சனம் செய்யாத கணவன், தன் துணையுடனான உறவின் மகிழ்ச்சியைத் தன் உயிருக்கு உயிரான பிறன்மனை நோக்கா உத்தம நண்பர்களிடம் கலந்தாலோசிக்காத கணவன்..
இது போன்ற குணநலன்களைக் கொண்ட கணவன் என்றால் மட்டுமே அவனிடம் அவனுடைய மனைவி தன் விருப்பு வெறுப்பை வெளிப்படையாகத் தெரிவிப்பாள். நாளைக்கு ஏதாவது ஒரு தகராறில் "வெட்கமே இல்லாம என்கிட்ட வந்து நின்னவ தானடி நீ.." என்று ஆண் சொல்லிவிட்டால் என்ன செய்வது. ஆண்களுக்குத் தான் கோபம் தலைக்கேறினால் என்ன பேசுகிறோம் என்றே சமயத்தில் புரியாதே.
மேலும் பெண்களுக்கு இருக்கும் அதீத பொறுப்புணர்வு அடுத்த நாளின் கடமைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கும்.. அதுவும் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் மற்றும் வயதான மாமியார் மாமனார் வீட்டில் இருந்தால், பெரும்பாலான பெண்களுக்கு வேலை பளு சற்று அதிகம் தான்.
முக்கியமாக ஆணின் உடலமைப்பு மற்றும் மனநிலை என்பது வேறு, பெண்ணின் மனநிலையும் உடலமைப்பும் வேறு. தன் தேவை தீர்ந்த உடனே குறட்டை விட்டு தூங்கும் ஆண்களிடம் பெண்கள் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் அதில் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிவதால் தன் துணையுடனான எதிர்பார்ப்பை ஒருவித அலட்சியத்துடனே கையாளுகின்றனர்.
வருடங்கள் செல்ல செல்ல ஆண்களின் எழுச்சியின் நிமிடங்கள் தானாகக் குறைந்து விடும்.. பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி 100-இல் 90 சதவிகித ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இதனாலேயே பெரும்பாலான பெண்கள் உறவில் திருப்தியடைந்தை போன்ற ஒருவித முகபாவத்தைக் காட்டி விட்டு தள்ளி படுத்து உறங்கி விடுகிறார்கள்.
இன்னொரு பயங்கர உண்மை என்னவென்றால், 100-இல் 99 சதவிகித பெண்கள் தம் விருப்பத்தை நேரிடையாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆண்களுக்கு இது காபி குடிப்பதை போல அடிக்கடி வேண்டும் என்பதால், ஒரு சில நாட்கள் தள்ளி படுத்தாலே தானாகத் தன் துணையின் பின்னால் ஆண்கள் சுற்ற ஆரம்பித்து விடுவதால், இதைப் பற்றிப் பெண்கள் அதிகம் மெனக்கெடுவதில்லை.
இன்னொரு காமெடியான சர்வே சொல்லும் செய்தி இது தான். எப்பேர்ப்பட்ட கஞ்சப் பயலாக இருந்தாலும், அவனும் வஞ்சனையின்றித் தன் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது கட்டிலில் தான். பொதுவாக நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் கூடும் தம்பதியினரில் பெரும்பாலான கணவர்கள், மனைவியுடனான கூடலில் வாக்குறுதி அளித்துப் பின் மாட்டிக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்களாம். ஒரு சிலர் மட்டுமே மனைவியின் பிறந்த நாள், திருவிழா போன்ற விஷயங்களுக்காகத் தம் துணையை நகைக்கடை மற்றும் துணிக்கடைக்கு அழைத்து வருவார்களாம்.
அறிவியல்பூர்வமாகப் பார்த்தாலும், எந்தப் பெண் உயிரினமும் வெளிப்படையாகத் தன்னுடைய பாலியல் தேவைகளை வெளிப்படுத்தாது. அது மனித பெண்ணாக இருந்தாலும் சரி, பெண் சிங்கமாக இருந்தாலும் சரி. ஆணினம் தான் தாஜா செய்து காரியத்தில் வெற்றி பெற வேண்டும்.