Breaking News :

Friday, October 04
.

பெண்கள் ஏன் போலியாக பாலுறவில்?


பல தலைமுறைக்கு முன்னர் பெண்கள் பாலுறவில் உச்ச இன்பத்தை பற்றி பெரிதாக சிந்தித்தது இல்லை.  அவர்களும் விவசாயம், தொழில் மாடு, ஆடு, கோழி வளர்ப்பு, வீட்டு வேலைகள், நெல் அவித்தல், மாவு ஆட்டுதல் என்று பல வேலைகளும் பெண்களே செய்தனர்.

மின்சாரத்தின் பங்கு அதிகம் இல்லாத காலம், மாலை உறக்கம், அதிகாலை எழுதல், பாலுறவு இன்பத்திற்காக இல்லாமல் 20 குழந்தைகள் வரை பெற்றாலும் பாலுறவில் உச்ச இன்பத்தை அடைந்தார்கள் என்றால் கேள்விக்குறியே
வெளிநாடுகளில் 1970 களில் பெண்களுக்கு உச்ச இன்பமே இல்லை என்று சில மருத்துவர்கள் கூறி வந்தார்கள்.  

சில ஊடகங்கள் பெண்களுக்கு உச்ச இன்பம் இருப்பதாக கற்பனையை உருவாக்க முயக்கிறார்கள் என்று கூறினார்கள்.

ஆனால் இப்போது நவீன மருத்துவம் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணை விட 10 மடங்கு அதிகமாக தனக்கு தகுந்தாற் போல் பல முறை உச்ச இன்பத்தை அனுபவிக்க முடியும் என்று கூறுகிறது.

ஆனால் பெண்ணுக்கு பல முறை உச்ச இன்பம் இருந்தாலும் ஒரு ஆண் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக பாலுறவு செய்தால் அவளுக்கு இன்பத்தை ஒரு துளி அளவு கூட கொடுக்கமுடியாது என்பது ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

அவளுக்கு விருப்பம் இல்லை என்றாள் அவளை விட்டு விலகுவதே ஒரு உண்மையான ஆண்மையின் அடையாளம் வீரம் ஆகும்.

காதலி, மனைவியாக இருந்தாலும் பாலுறவிற்காக வற்புறுத்த கூடாது, அவளாக தேடி வருவது போல் மனநிலையை ஒரு ஆண் உருவாக்க வேண்டும்.  அதுவே ஆணிற்கு பாலுறவில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

அவளாக மனம் இசைந்தால் தான் பாலுறவில் பல சாகசங்கள் நிகழ்த்த முடியும் அதனால் மனைவி அல்லது காதலியை அடைய  பல யுத்திகளை கையாள வேண்டியது ஒரு காதலனின் கடமை.

இங்கிலாந்தில் 2014 ல் நடந்த ஆய்வுப்படி பெண் பலமுறை உச்சம் அடையமுடியும் என்று கூறியது.

டாக்டர் David Delvin பெண்கள் ஏன் போலியாக பாலுறவில் உச்சம் அடைவது போல் நடிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தார்.

ஒரு ஆண் கலவியில் பெண்ணை திருப்திபடுத்தும் படியாகத்தான் அவன் பிணைக்கபட்டு இருக்கிறான்.  இப்படி பிணைக்க பட்டு இருந்தாலும் அவளை திருப்த்திபடுத்த பெரும்பாலான ஆண்கள் ஆர்வம் கொள்ளவது இல்லை.

பாலுறவில் அதிக ஆர்வம் உள்ள ஆண்களும் இதில் அடங்குவர்.  இவர்கள் அதிக பாலுறவில் ஆசை இருந்தாலும் தன் ஆசையை தீர்த்து கொள்ளவே முனைகிறார்கள்.

இவனின் பாலுறவில் வேகம் காட்டுவது இவனுக்கு வேண்டும் என்றால் திருப்தியை தரும் ஆனால் அந்த பெண்ணிற்கு எந்த பயனும் இல்லை மேலும் இவன் அவளை திருப்த்திபடுத்தியதாகவும் எண்ணி கொள்கிறான்.

ஒரு பெண் எளிதாக கண்டுபிடித்து விடுவாள் இவன் நமக்கு இன்பத்தை கொடுக்கின்றானா இல்லை இவன் தன் உடலை உண்பதற்கு வருகின்றனா என்று.  
பெரும்பாலான ஆண்களுக்கு கலவி என்பது பெண்ணின் உடலை உண்ணுவது போலத்தான் பாலுறவு கொள்கிறார்கள்.

ஆனால் பெண்ணிற்கு அவன் உச்ச அடையும் போதே தானும் உச்சம் அடைந்ததாக அவனுக்கு காட்டியாக வேண்டும் அதனால் அநேக பெண்கள் உச்ச வருவது போல் நடிக்க செய்கிறார்கள்.  

எனக்கு உச்சம் கிடைத்துவிட்டது என்று ஆணிடம் பொய் கூறுவாள்.  எந்த காரணம் கொண்டும் உன்னால் எனக்கு இன்பம் கிடைக்கவில்லை என்று கூறவே மாட்டாள்
ஏனென்றால் அது அவளின் மனதிற்கு பிடித்த காதலன், கணவன் என்பதால் அவன் மனது பாதிப்பு அடையும் என்று ஒரு சிலர் கூறமாட்டார்கள்.

பெண்கள் பெரும்பாலும் தன் பாலியல் ஆசையின் விருப்பங்கள், வெறுப்புகளை மறைத்து வைக்கும் படியே அவர்கள் இந்த சமுதாயத்தில் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி (ganesanmatrimony.com) பார்க்கவும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.