கறிவேப்பிலையை உணவு பதார்த்தத்தில் இருந்தாலே தூக்கி எறியும் பழக்கம் சிலரிடையே உள்ளது.
பச்சை கறிவேப்பிலையை மென்று திண்ணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.
கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பரம்பரை நரை முடி பிரச்சினை ஏற்படாது.
கண்பார்வைக் குறைபாடும் ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ உண்டு வந்தால் நுரையீரல், இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களே நம்மை அண்டாது.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவும்.
கறிவேப்பிலையை பறித்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.