இன்றைய மாறி வரும் இளைய தலைமுறையினரிடையே, காலை உணவின் அவசியத்தின் புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்.
நாம் இரவு உறங்கச் செல்லும் நேரத்திற்கும், காலையில் எழும் நேரத்திற்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இந்த நேரத்தில் காலையில் எந்த வித உணவும் இன்றி இருந்தால், நம் உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கு இதுவே வழிவகுக்கும். நம் முன்னோர்கள் வகுத்து வைத்துவிட்டு சென்ற நெறிமுறைகள் நாம் அவசியம் கடைபிடிக்கவேண்டும்.
காலை உணவு, அன்றைய தினத்தின் மிக முக்கியமான உணவு. மற்ற உணவு வேளைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்தைத் தருவதிலும் பாதுகாப்பதிலும் காலை உணவே முக்கியப் பங்கு வகிக்கிறது.
காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாகச் செயல்படுவதோடு மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது.