Breaking News :

Sunday, May 19
.

உடல் எடை குறைக்க இத சாப்பிடுங்க பனங்கிழங்கு!


பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை கிழங்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிடைக்கும். இந்த கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
 
பனை மரத்தி்ல் இருந்து கிடைக்கும் நுங்கு, பனம் பழம், பனை வெல்லம், பனை கல்கண்டு, பதனி, பனை கிழங்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களுமே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்த கொடுக்கிறது. பனைமரம் இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் வளம் அதிகமாக இருக்கும்.
 
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை கிழங்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கிடைக்கும்.  இந்த கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

பனை கிழங்கில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், இரத்தக் கொழுப்பைக் குறைக்கவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடல்  எடையை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். உடல் சோர்வைக் குறைக்கிறது, இரும்பு ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

பனை கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செறிவு மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.  பனை கிழங்கில் கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது. இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்கவும், எலும்பு கோளாறுகள் மற்றும் தசை சுருக்கங்களை தடுக்கவும் உதவுகிறது.

மெக்னீசியம் அதிகம் உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புரதம் முக்கியமானது. பனை கிழங்கில், நல்ல அளவு புரதம் உள்ளது, இது திசுக்களை கட்டமைக்கவும், சரிசெய்யவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் மற்றும் தசையை உருவாக்கவும் அவசியம்.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவுகள் ஜீரணமாகி, உடலில் மெதுவாக உறிஞ்சப்படுவதால், இரத்த குளுக்கோஸின் மெதுவான உயர்வை ஏற்படுத்துகிறது.

பனங்கிழங்கு சீசன் இதுதான்; மிஸ் பண்ணாதீங்க!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.