Breaking News :

Sunday, May 19
.

ஒல்லியாவோ இல்ல பருமனாக வேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்


அமுக்கிராங்கிழங்கு கால் கிலோ எடுத்துக்கோங்க... அதை நல்லா காய வச்சி பொடியாக்குங்க. பிறகு, ஒரு பாத்திரத்தில பால் ஊத்தி தேவையான அளவு தண்ணி ஊத்தி அதுக்கு மேல வேடு கட்டி (பாத்திரத்தின் வாய் பகுதியில் துணியைக் கட்டி வைப்பது) அதுக்கு மேல அமுக்கிராங்கிழங்கு பொடியை வச்சு அவிக்கணும். நல்லா ஆவி வந்ததும் இறக்கி வச்சு சூடு ஆறினதும் திரும்பவும் பொடியாக்கி வச்சிக்கிடணும். அதுல கால் ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து காலையிலயும் சாயங்காலமும் வெறும் வயித்துல சாப்பிடணும்.

இதை ஒரு மண்டலமோ, ரெண்டு மண்டலமோ சாப்பிடுங்க. பருத்த தேகம் நாளடைவுல மெலிஞ்சுடும்.

இதே சூரணத்தை கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து காலைலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... எலும்பும் தோலுமா உள்ளவங்களோட உடல் பருக்கும். சதாவரிக் கிழங்கு சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து அதோட கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட்டாலும் உடல் பருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.