எண்ணெய் சூடாக இருக்கிறது என்று தப்பிப்பதற்காக வெளியே குதித்து, நேராக எரியும் அடுப்பில் விழுந்து எரிந்த கதையாகிவிடும்
ஓரிருமுறை அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்தால், அதன் பின் அதனை தினமும் காலை, மாலை காபிக்காக மனம் ஏங்கி எதிர்பார்த்து தலைவலி உண்டாகும் நிலைபோல ஒரு கடின நிலைக்கு தள்ளிவிடும். இருந்தாலும் பரவாயில்லை. எடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற மருத்துவ நிலைமை இருந்தால் முதலில் இந்த விஷயங்களை படித்து விட்டு அடுத்து எடுக்கலாம் .
படுக்கைக்கு செல்வதற்கு முன் சுமார் அரை மணி நேரம் முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். இந்த மாத்திரை எடுத்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் உடல்நிலை சூடாவது போல ஒரு உணர்வு தோன்றும். கன்னங்கள் ,முகம் எல்லாம் வீங்கியது போலவும் ஒரு எண்ணம் உண்டாகும்.
சிறிது கண் எரிச்சல் உண்டாகும். மாத்திரை எடுத்துக்கொண்ட பலருக்கு தலைவலி கண்டிப்பாக உண்டு. இதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதனை சரி பண்ணுவதற்காக மற்றொரு கம்போஸ் மாத்திரையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
அல்சர் இருப்பவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் ஆரம்பித்துவிடும். தொடர்ச்சியாக ஒரு வாரம் உபயோகித்தாலும் தீராத நெஞ்சு எரிச்சல் உண்டாகிவிடும் . அதேபோல சிறுநீரின் நிறமும் மாறிவிடும் மஞ்சள் நிறமாக. இன்னும் சொல்லப்போனால் ரத்தம் கலந்தது போல கடுக்க ஆரம்பித்துவிடும்.
ஆனால் முதல் முறையாக எடுப்பவர்கள் பாதியளவு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். குளிர்பானம், ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்,
தலைவலி மாத்திரை ஒன்று மறுநாள் காலையில் போடுவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம், பழங்கள் கருப்பு திராட்சை ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடலாம்.
அப்படி என்றால்தான் இந்த மாத்திரையின் பாதிப்பிலிருந்து தாக்குப்பிடிக்க இயலும் .இல்லையென்றால் சங்கடம் தான். மற்றுமொன்று இதில் கிடைக்கும் விஷயங்கள் இயல்பிலேயே உணவு விஷயங்களில் உடலுக்கு உடனடி குளுக்கோஸ் போல கிடைக்கின்றது. அதனை எடுத்துக்கொண்டாலே கண்டிப்பாக இந்த மாத்திரை செய்யும் வேலைகளை விட அதிகமாகவே செய்து கொடுக்கும் .
ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் நாடும் பாஸ்ட்புட் உணவுகள் போல இந்த விஷயத்திலும் நாம் நாடுவது வயாகரா தான் . நமக்கு உணவு வகையிலும் பாஸ்ட் புட் வேண்டும் .வாகனங்களிலும் ஆறு நொடிகளில் 60 கிமீ வேகத்தை உடனடியாக எட்ட வேண்டும் .
அதேபோல தான் இந்த விஷயத்திலும் .ஆனால் ஒண்ணு ,ஆறே செக்கண்டில் 60 கிலோமீட்டர் வேகம் ஈஸியா அடைஞ்சிரலாம் .ஆனால் ,அதே போல பெட்ரோலும் பொசுக்குன்னு தீர்ந்துரும் .அப்புறம் உருட்டிகிட்டே ஊரு போயி சேரவேண்டியதான் .
சமீபகாலமாக மாரடைப்பால் மரணம் அடைப்பவர்கள் அதிகமானோர் அடிக்கடி வயகரா மாத்திரை போட்டவர்கள் என கேள்வி பட்டு இருக்கிறேன்,
தவிர்த்து கொள்ளவும். இயற்கை வயகார தர்பூசணி சாறு தொடர்ந்து பருகவும்,