பாதுகாப்பான உடலுறவு கொள்வதே ஒரு திருமணத்திற்கான நோக்கம்.
தந்திரா சூத்திரம் தெரியாத பாலுறவு முடிந்த பிறகு அந்த பெண்ணை விலகிச்செல்லவே அந்த ஆணிற்கு தோன்றும் உணர்வாக இருக்கும். இதில் எந்த ஆணும் விதிவிலக்கு இல்லை.
திருமண பாலுறவு உடல் ஆரோக்கியத்தை பேணுவதாக இருந்தாலும், மனதின் ஆரோக்கியத்தை பேணுவது இல்லை. இப்படி உடல் தேவைக்காக மட்டும் ஒரு பெண்ணிடம் பாலுறவு கொள்ளும்போது அந்த பெண்ணை மிகவும் பாதிக்கிறது. இவ்வாறு பெண்ணின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல் செய்யப்படும் பாலுறவு எவ்வாறு கணவன் மனைவி உறவை வளர்ப்பதாக இருக்கும்.
எத்தனை பெண்கள் ஆண்களின் அணுகுமுறை தவறினால், உடல் உறவு கொளவதற்கே நடுங்குகிறார்கள் என்று ஆண்களுக்கு தெரிவது இல்லை. அதனால் எத்தனை ஆண்கள் பாலுறவில் பெண்களின் ஒத்துழையாமையினால் வெறுப்புக்கு உள்ளாகும் ஆண்களும் ஏராளம்.
பெரும்பாலும் பாலுறவில் பெண் கொடுப்பவளாகவும், ஆண் பெற்று கொள்பவனாகவும் பல்லாயிரம் காலமாக அரங்கேறிகொண்டு இருக்கிறது.
இங்கு பெண்ணிற்கே தான் கொடுப்பவள்தான் என்று அவள் ஆழ்மனதில் ஆழமாக பதிந்து போய்விட்டது. பாலுறவு என்பது இருவருக்குள்ளும் சரிசமமான பகிர்வு. இந்த சமமான பகிர்வு பெரும்பாலும் பெண்களுக்கு கிடைப்பது இல்லை.
பெரும்பாலும் இங்கு ஆணிற்கு உச்சம் ஏற்பட்டவுடன், சுமுகமாக பாலுறவு முடிந்து விட்டது என்று பொருள். இன்னும் புதிதாக திருமணமான வாலிப வயது ஆண் தன் இன்ப நீர் பெண்ணின் குறியில் வெளியேற்றியவுடன் பாலுறவை முடித்து கொண்டு தூங்கிவிடுகிறான் அங்கு இருந்தே பெண்ணின் மனதில் ஆறாத வடுவாக ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறது.
எத்தனை ஆண்கள் கலவியின் போது அந்த பெண்ணின் கண்களை பார்க்கிறார்கள். பெண்ணின் கண்களை பார்த்து அவள் எத்தகைய இன்பத்தை பெறுகிறாள் என்று அறிய கூடிய ஆண்கள் எத்தனை பேர் உள்ளனர். பெண்ணின் கண்கள் படும்போது அவள் எதற்கு ஏக்கம் கொள்கிறாள் என்று ஒரு ஆண் அறிந்து கொள்ளும் திறமையை அறிந்து கொள்ளவேண்டும். அதை அறிந்து கொண்டு அவள் கேட்க்கும் முன்பே செய்யும் ஆணாக இருக்க வேண்டும்.
பெண் புலம்புகிறாள். இங்கு குழந்தையை மட்டும் சுமப்பது இல்லை. பாலுறவில் தன் மேல் விழும் ஒரு ஆணின் சரீரத்தையும் வாழ்நாள் முழுவதும் தாங்கி கொள்கிறோம் என்று வேதனை அடைகிறாள்.
பாலுறவில் ஆண் இயங்குபவனாகவும், பெண் இயக்கம் ஆற்றும், சும்மா கிடந்தாலும் பரவாயில்லை என்ற நிலை உள்ளது.
பெண் பாலுறவில் இயக்கம் கொள்ளக்கூட அஞ்சுகிறாள், எங்கு பெண் இயங்கினால் ஆண் தன்னை சந்தேகம் கொள்வான் என்று படுத்து மட்டும் இருக்கிறாள். பல்லாயிரம் வருடமாக ஆண் சமூகம் பெண் சமூகத்திற்கு பாலுறவில் கொடுத்த சுதந்திரம் அவ்வளவுதான். ஆனால் பாலுறவை சாதகமாக பயன்படுத்தி தனக்கு தேவையான சொத்துகளை பெற்று கொள்ளும் பெண்களும் உண்டு.
ஆனால் சில அப்பாவி பெண்கள் தன் மனதிற்குள் வாழ்நாள் முழுவதும் மருகியே சாகுகிறார்கள்.
இதை வைத்து பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களுக்கு பாலுறவு கலவி ஆசை போய்விடுகிறது என்று இந்த சமூகம் முற்று புள்ளி வைத்துவிடுகிறது. இதனால் ஆணின் நிலை வெளியில் எங்கயாவது கிடைக்காத என்று அலைகிறான் இதில் நடிகர்கள், அரசியல்வாதிகள், போதகர்கள் அனைவரும் உள்ளடக்கம்.
பெண் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆண் தன் தேவைக்கு பெண்ணின் உடலை பயன்படுத்தி;கொள்ள அனுமதிக்கும் பெண்களே இங்கு அதிகம்.