Breaking News :

Sunday, September 15
.

உடலுறவில் நாட்டமின்மை ஏன்?


நெருக்கம் குறைகிறது...

கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்...

எளிதில் சலித்துப் போய்விடும்...

படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது,

உடலுறவில் நாட்டமின்மை...

நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்,

வேறு ஒருவர் மீது காதல்/ஆசை...

உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்...

சண்டைகள் & சந்தேகங்கள்...

ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது... ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும்.

இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்...
அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள் ஆகவே நண்பர்களே...

உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.